மத்திய பட்ஜெட் 2026 - 27: முக்கிய அம்சங்கள்
துறைவாரியான அறிவிப்புகள்
தயாரிப்பு
* இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0 செயல்படுத்தப்படும்
* பயோபார்மா தயாரிப்புக்கு ஷக்தி என்ற பெயரில் ஊக்கம்
* மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு திட்டம்
* ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி திட்டம்
* மூன்று ரசாயன பூங்காக்கள் அமைக்கப்படும்
* அரிய வகை காந்தங்கள், தாது திட்டத்தில் மாநிலங்கள் ஊக்குவிப்பு
* விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்புக்கு ஊக்கம்
* 200 பாரம்பரிய தொழில் கிளஸ்டர்கள் புதுப்பிப்பு
விவசாயம்
* 'தென்னை ஊக்குவிப்பு திட்டம்' துவங்கப்படும். மகசூல் கொடுக்காத தென்னை மரங்கள் அகற்றப்பட்டு, புதிய ரக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்படும்
* முந்திரி, கோகோ உற்பத்திக்கு தனித்திட்டம் உருவாக்கப்படும். ஏற்றுமதியில், 2030க்குள் உயர் ரக இந்திய பிராண்டு முந்திரி உற்பத்தி செய்ய திட்டம்
* உயர் மதிப்பு கொண்ட தென்னை, கோகோ, முந்திரி பயிர்களை கடலோரங்களில் வளர்க்க ஊக்குவிக்கப்படும்
* மலை பகுதிகளில் நட்ஸ், பாதாம், வால்நட் சாகுபடி ஊக்குவிக்கப்படும்
* உயர் மதிப்பு கொண்ட சந்தன மர உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முறைகள் ஆகியவை மாநில அரசுகளோடு இணைந்து ஊக்குவிக்கப்படும்
* வால்நட், பாதாம், பைன் நட்ஸ் உற்பத்தியை பெருக்க அடர் நடவு முறை, அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டலுக்கு ஆதரவு வழங்கப்படும்
* 'பாரத் விஸ்தார்' என்ற பெயரில் அக்ரிஸ்டேக் தளங்கள் மற்றும் ஐ.சி.ஏ.ஆரின் விவசாய வழிமுறைகளை வழங்க, பன்மொழியில் ஏ.ஐ., கருவி உருவாக்கப்படும்.
சேவைகள்
* மருத்துவம் சார்ந்த சுற்றுலாவுக்கு ஐந்து மையங்கள்
* மருத்துவ கவனிப்புக்கு 1.50 லட்சம் பேருக்கு பயிற்சி
* மூன்று புதிய ஆயுர்வேத சிகிச்சை பயிற்சி மையங்கள் அமைப்பு
கல்வி
* புதிய தேசிய டிசைன் கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்
* மாவட்டந்தோறும் மகளிருக்கு விடுதி வசதி ஏற்படுத்தப்படும்
* தேசிய விருந்தோம்பல் கல்வி நிறுவனம் அமைக்கப்படும்
கால்நடை
* கடலோர பகுதிகளில் மீன் உற்பத்தி செயல்முறைகள் வலுவாக்கப்படும்
* கடன் இணைப்பு மானிய திட்டம், கால்நடை சார்ந்த உழவர் உற்பத்தியாளர்களின் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கப்படும்.
நீர்வழி போக்குவரத்து
* ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 500 நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படும்.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 புதிய நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
எம்.எஸ்.எம்.இ.,
* சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிதிக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* சுயசார்பு இந்தியா நிதிக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* எம்.எஸ்.எம்.இ., பொருள் விற்பனையில் தள்ளுபடிக்கு கடன் உத்தரவாதம்
கட்டமைப்பு
* கட்டமைப்பு அபாய உத்தரவாத நிதி உருவாக்கப்படும்
* புதிதாக 20 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
* மாநிலங்களின் கட்டமைப்பு திட்டங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய்
* கிழக்கு கடற்கரை தொழில் வழித்தடம் உருவாக்கப்படும்
மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள்
முதியோர் பராமரிப்பு
முதியோர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்த, பிரத்யேகக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதற்காக, 1.50 லட்சம் பேருக்கு பல்திறன் கொண்ட பராமரிப்பாளர்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெண்கள் முன்னேற்றம்
சுயஉதவி குழுக்களை சார்ந்த தொழில்முனைவோருக்காக, கிளஸ்டர் அளவில் சமூக பங்களிப்புடன் கூடிய, 'ஷீ மார்ட்' எனும் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு
'திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா' திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு கவுரவமான வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
உதவி உபகரணங்கள்
'திவ்யாங் சஹாரா யோஜனா' வாயிலாக, தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உயர்தரமான உதவி உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
திவ்யாஷா மையங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான, 'பிரதமரின் திவ்யாஷா மையங்கள்' நவீன வசதிகளுடன் கூடிய சில்லரை விற்பனை மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
மனநல மருத்துவம்
மனநல சிகிச்சையை மேம்படுத்தும் விதமாக, இரண்டாவது 'நிம்ஹான்ஸ்' நிறுவனம் உருவாக்கப்படும். மேலும், ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல கழகங்கள் மேம்படுத்தப்படும்.
அவசர சிகிச்சை
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து காய சிகிச்சை மையங்கள் புதிதாக நிறுவப்படும்.
ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம்
தேசிய நுாலிழை திட்டம்
பட்டு, நுால் மற்றும் சணல், செயற்கை நுாலிழை மற்றும் புதிய நுாலிழை ஆகியவற்றில் சுயசார்பு எட்டுவது.
ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் பாரம்பரியமான ஜவுளி மையங்களை நவீனப்படுத்த, புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு மூலதனமும், தரப் பரிசோதனை, சான்றிதழ் வழங்கும் மையங்களை அமைக்க ஆதரவு.
தேசிய கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திட்டம் நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கான தற்போதுள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து, நேரடியாக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது.
'டெக்ஸ் எக்கோ'
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'டெக்ஸ் எக்கோ' வாயிலாக, உலகளவில் போட்டிமிக்க, நீடித்த ஜவுளி, ஆடைகளுக்கு வலுப்படுத்தல்.
சமர்த் 2.0 திட்டம்
இதன் வாயிலாக ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திறனை மேம்படுத்த, தொழில் துறை மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து, திறன் சூழல் மேம்படுத்தப்படும்.
மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். நிலம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்டவற்றை அளிக்க முன்வரும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவற்றில் தொழில்நுட்ப ஜவுளிகளை மதிப்புக் கூட்டுவதில் கூடுதல் கவனம். மேலும், காதி, கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் துறையை வலுப்படுத்த, மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் திட்டம் துவங்கப்படும். இத்திட்டம், நெசவாளர்கள், கிராம தொழில்கள் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்துக்கு நன்மை தரும்.



கன்டெய்னர் தயாரிப்புக்கு ரூ.10,000 கோடி
கன்டெய்னர் தயாரிப்புக்கான புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. உலகளவில் போட்டியிடும் அளவுக்கு, நம் நாட்டின் கன்டெய்னர் தயாரிப்பு சூழலை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு உபகரணங்கள் மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். அதன் வாயிலாக, கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 புதிய நீர்வழி தடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். உள்நாட்டு நீர்வழி தடத்தில் செல்லும் கப்பல்களுக்காக வாரணாசியிலும், பாட்னாவிலும் பழுதுபார்ப்பு மையங்கள் அமைக்கப்படும்.
பட்ஜெட்டில் தமிழகம்
* சென்னை- - பெங்களூரு, ஹைதராபாத் -- சென்னை அதிவேக பயணியர் ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
* அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லுார், சுற்றுலா பயணியருக்காக திறந்துவிடப்படும். இதற்காக தனி நடைபாதை அமைக்கப்படும். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உதவும் வகையில், நவீன கதை சொல்லும் திறனுடன் கூடிய தொழில் நுட்பங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையில் மலையேற்ற பயிற்சியாளர்களுக்கு வழித்தடம்.
* ஆர்வலர்கள் பறவைகளை காண வசதியாக, புலிக்காட் ஏரியில் (பழவேற்காடு) பறவைகள் கண்காணிப்பு பாதைகள் உருவாக்கப்படும்.
* கடந்த 2025ல் அரிய வகை காந்தங்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, கனிம வளம் மிகுந்த தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இத்துறைக்காக பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், குறிப்பாக கோவில் நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படும். பல்வேறு வளர்ச்சி காரணிகளின் அடிப்படையில் நகர பொருளாதார மண்டலங்கள் வரையறுக்கப்படும். ஒரு மண்டலத்துக்கு ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பல கோவில் நகரங்களை கொண்ட தமிழகம், இதனால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3.09 லட்சம் கோடி
இந்த பட்ஜெட்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு நிதி ஒதுக்கீடு 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது, நடப்பு நிதியாண்டில் அந்த துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.87 லட்சம் கோடி ரூபாயைவிட கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகம். என்.ஹெச்.ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், நடப்பு நிதியாண்டில் 1.70 லட்சம் கோடியாக உள்ள நிதி ஒதுக்கீடு, 2026 - 27ம் நிதியாண்டுக்கு1.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. வரும் மார்ச் 31ல் நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், என்.ஹெச்.ஏ.ஐ.,யின் கடன் தொகையை 2 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழே கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
'விபி - ஜி ராம் ஜி' திட்டத்துக்கு ரூ.95,000 கோடி
பட்ஜெட்டில், மத்திய ஊரக வளர்ச்சி துறைக்கு மொத்தம் 1.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 1.87 லட்சம் கோடி ரூபாயைவிட சற்று அதிகம். நுாறு நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக, 'விபி - ஜி ராம் ஜி' திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கு 95,692 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு 30,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆறு ஆண்டுகள் தாமதமாக, வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு; 2027 பிப்., 1 முதல் மக்கள் தொகை, ஜாதி வாரி கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுதும், டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வாயிலாக நடைபெறும் கணக்கெடுப்பில், 30 லட்சம் களப்பணியாளர்கள், 1.8 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி
பாதுகாப்பு துறைக்கு மொத்தம் 7.85 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் 6.81 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும். இதில், புதிய ஆயுதங்கள் வாங்குவதற்கான மூலதன செலவு மற்றும் ஓய்வூதியத்துக்கான 1.71 லட்சம் கோடி ரூபாயும் அடங்கும். ஓய்வூதியம் மற்றும் சிவில் செலவுகள் சேர்க்கப்படாமல், ராணுவ செயல்பாடுகளுக்கு மட்டும் 5.95 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
@block_Y@
ரயில்வே துறைக்கு கடந்த பட்ஜெட்டில் 2.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2.93 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.block_Y
@block_G@
பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களை வாங்கியவர்கள், முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.block_G
@block_B@
மத்திய அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களை பணமாக்க, பிரத்யேக ரீட்ஸ் எனப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் உருவாக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் சொத்துகளை சொந்தமாக அல்லது நிர்வகிக்கும் முதலீட்டு அமைப்பு, ரீட்ஸ் எனப்படுகிறது. முதலீட்டாளர்கள் நேரடியாக சொத்துகளை வாங்காமல், அந்த சொத்துகள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை பெற ரீட்ஸ் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், சொத்துகளை பணமாக்குவதற்கான ஒரு வெற்றிகரமான கருவியாக ரீட்ஸ் உருவெடுத்துள்ளது. எனவே, மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் சொத்துகளை, பிரத்யேக ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் அமைப்பதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் சொத்துகளை மறுசுழற்சி செய்வது விரைவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.block_B
@block_P@
புதிய வருமான வரி சட்டம், வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 60 ஆண்டு கால பழமையான வரி சட்டத்துக்கு மாற்றாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
எளிமையாக்கப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இது, வரி செலுத்துவோர் அதன் தேவைகளை அறிந்து கொள்வதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; மதிப்பீட்டு ஆண்டு, முந்தைய ஆண்டு என்ற குழப்பமான நடைமுறை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒற்றை வரி ஆண்டு என்றே குறிப்பிடப்படும். காலக்கெடுவுக்கு பின் வருமான வரி தாக்கல் செய்தாலும், அபராத கட்டணங்கள் இன்றி, ஏற்கனவே கூடுதலாக பிடித்தம் செய்த வருமான வரி தொகையை திரும்ப பெறவும் புதிய வருமான வரி சட்டம் அனுமதிக்கிறது.block_P
பட்ஜெட்டில் அறிவிப்புகள் பெரிதாக ஏதும் இல்லை