பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்க ரீட்ஸ்

ம த்திய அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களை பணமாக்க, பிரத்யேக ரீட்ஸ் எனப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் உருவாக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சொத்துகளை சொந்தமாக அல்லது நிர்வகிக்கும் முதலீட்டு அமைப்பு, ரீட்ஸ் எனப்படுகிறது. முதலீட்டாளர்கள் நேரடியாக சொத்துகளை வாங்காமல், அந்த சொத்துகள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை பெற ரீட்ஸ் வழிவகை செய்கிறது.

இந்நிலையில், சொத்துகளை பணமாக்குவதற்கான ஒரு வெற்றிகரமான கருவியாக ரீட்ஸ் உருவெடுத்துள்ளது. எனவே, மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் சொத்துகளை, பிரத்யேக ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் அமைப்பதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் சொத்துகளை மறுசுழற்சி செய்வது விரைவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement