ஜவுளித்துறையை ஊக்குவிக்க
ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம்
தேசிய நுாலிழை திட்டம்
பட்டு, நுால் மற்றும் சணல், செயற்கை நுாலிழை மற்றும் புதிய நுாலிழை ஆகியவற்றில் சுயசார்பு எட்டுவது.
ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்
பாரம்பரியமான ஜவுளி மையங்களை நவீனப்படுத்த, புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு மூலதனமும், தரப் பரிசோதனை, சான்றிதழ் வழங்கும் மையங்களை அமைக்க ஆதரவு.
தேசிய கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திட்டம்
நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கான தற்போதுள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து, நேரடியாக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது.
'டெக்ஸ் எக்கோ'
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'டெக்ஸ் எக்கோ' வாயிலாக, உலகளவில் போட்டிமிக்க, நீடித்த ஜவுளி, ஆடைகளுக்கு வலுப்படுத்தல்
சமர்த் 2.0 திட்டம்
இதன் வாயிலாக ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திறனை மேம்படுத்த, தொழில் துறை மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து, திறன் சூழல் மேம்படுத்தப்படும்.
ஜவுளித்துறையை ஊக்குவிக்க, ஒருங்கிணைந்த உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஐந்து உட்பிரிவுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.