நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3.09 லட்சம் கோடி
இந்த பட்ஜெட்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு நிதி ஒதுக்கீடு 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது, நடப்பு நிதியாண்டில் அந்த துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.87 லட்சம் கோடி ரூபாயைவிட கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகம்.
என்.ஹெச்.ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், நடப்பு நிதியாண்டில் 1.70 லட்சம் கோடியாக உள்ள நிதி ஒதுக்கீடு, 2026-27ம் நிதியாண்டுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்த்தப்படவுள்ளது. வரும் மார்ச் 31ல் நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், என்.ஹெச்.ஏ.ஐ.யின் கடன் தொகையை 2 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழே கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும் செய்திகள்
Advertisement
Advertisement