பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக
நமது சிறப்பு நிருபர்
ஹிந்தி திணிப்பு பற்றி ஆங்கில ஊடக விவாதத்தில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர், பாஜ பிரதிநிதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்து அசிங்கப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
2026-27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 01) பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலில் விவாதம் நடந்தது.
அப்போது குறுக்கிட்ட பாஜ தேசிய தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, 'இந்த போராட்டம் யார் ஆட்சிக்காலத்தில் நடந்தது' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, 'காங்கிரஸ்' என திமுக செய்தித்தொடர்பாளர் பதில் அளித்தார்.
அடுத்த வினாடியே, 'இப்போது நீங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறீர்கள்...' என்று பாஜ செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பினார். கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, திமுக பிரதிநிதி எதுவும் பேசாமல் இருந்த நிலையில், ''காங்கிரசுடன் தானே கூட்டணி' என்று கூறினார். பாஜ., செய்தி தொடர்பாளர்.
இதைக்கேட்டதும், நெறியாளர் உட்பட விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெடிச்சிரிப்பு சிரித்து தங்கள் ரியாக்சனை வெளிப்படுத்தினர். இதைப்பார்த்து பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக செய்தித்தொடர்பாளர், மிமிக்ரி செய்வது போல கேலிச்சிரிப்பு சிரித்து நிலைமையை சமாளித்தார்.
திமுக செய்தித் தொடர்பாளர் பதில் சொல்ல முடியாமல் கேலிச்சிரிப்பு சிரித்து அசிங்கப்பட்டதை கவனித்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.
அவற்றில் சில பதிவுகள்:
* சமாளிக்க முடியாவிட்டால் பைத்தியம் போல் நடித்து தப்பி விடு; திமுக ஊடக கொள்கை 420.
* சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு 200 பொற்காசுகள் வழங்கப்படும். அந்த சிரிப்பு பயங்கரம் அண்ணே.
* Melting Point Saravanan finally reached his Boiling Point
* Best Video meme of the year 2026.. And the credit goes to @saravofcl
* கேள்வி கேட்டு அவங்கள் தான் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றால் நீயும் சிரித்து அசிங்கபடுகிறாயே!
* உங்களுக்கு சாதகமான தொலைக்காட்சியில் விவாதம் வைத்து திமுக சார்ந்த ஆட்களை வைத்து கொண்டு நீங்கள் பேசும் போது, மற்ற கட்சிகளுக்கு எப்படி இருக்குமோ, அதுதான் நேஷனல் மீடியாவில் உங்களுக்கு நடக்கிறது. இவ்வாறு திமுக செய்தித் தொடர்பாளரை இணையத்தில் பயனர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.
அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ டிரெண்டிங்கில் இருக்கிறது.
இது குறித்து உங்களது கருத்துக்களை கமென்ட் பகுதியில் எழுதுங்கள்.
சார் அரசியல் தெரிந்தவர்களை கேளுங்க திமுக ஒரு விஷயத்தை எதிர் கட்சியா எதிர்க்கும் ஆளும் கட்சியா ஆதரிக்கும் எதிர்கட்சியா டாஸ்மாக்கை மூட சொல்லி போராட்டம் ஆனால் ஆளும்கட்சியா ஆதரவு ஸ்டெர்லைட் திறக்க அனுமதி தந்தது திமுக ஆனால் எதிர்கட்சியா மூட வைத்தது திமுக இதுபோல பல உள்ளன.
அசிங்கம் என்பது திமுகவின் உடலில் ஊறியுள்ளதுதானே... புதுசா என்ன?
தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழி இந்தி சமஸ்கிருதம் உருது இருக்கு தெரியுமா.
இந்தி மொழி உள்ள மாநிலங்களில் மூன்றாவது மொழி சமஸ்கிருதம் உருது இருக்கு.
has impressive listening skills. He hears one thing, understands something else, and replies completely out of context. Take some English lessons.......வடக்கனுங்க படிக்காத அழுக்கு கோட்டை இப்படி மிதிக்கிறானுங்க .....
இதையெல்லாம் தொடச்சு விட்டுட்டு போயிகிட்டே இருப்போம் -
Even when I ask you questions in English you don’t understand....படிக்காத அழுக்கு கோட்டுக்கு இப்படி சவுக்கடி கொடுத்தாலும் முகத்தை துடைத்து கொண்டு வெட்கமில்லாமல் திருப்பி வந்து பேசும் ....
தமிழ் நாட்டில் CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே 40 முதல் ஐம்பது சதம் உள்ளது ....அங்கெல்லாம் ஹிந்தி திணிப்பு நடக்குதா ??......ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு ஹிந்தி திணிப்பு என்று வேண்டும் என்றே பிரச்சாரம் செய்யும் விடியலுக்கு இப்படித்தான் விடியும் .....ஹிந்திக்கு பதிலாக உருது மொழி என்றால் அப்ப மட்டும் விடியலுக்கு மத சார்பின்மையாக இனிக்கும் .....வெட்கம் மானங்கெட்ட கூட்டம் ....
தமிழன் வரிப்பணத்தில் நடக்கும் அரசு உதவி பெறும் உருது பள்ளியில் தமிழே படிக்காமல் பள்ளி இறுதி தேர்வு எழுதலாம் என்று உத்தரவு போட்டது விடியல் அரசு .......ஹிந்தி என்றால் எதிர்ப்பு ஆனால் உருது என்றால் மட்டும் விடியலுக்கு மத சார்பின்மையாக இனிக்குதே... அது எப்படி?? ......
இங்கே இருக்கும் ஊடகங்களை தங்கள் கையில் வைத்து கொண்டு, தனக்கு சாதகமா பேசி சமாளித்து வந்தவர்கள், தற்பொழுது ஒரு சரியான கேள்வியை பார்த்து பயந்து பைத்தியம் படித்து விட்டது.
அறிவற்ற முட்டாள்களுக்கு தெரியாது, தள காங்கிரஸ் தான், மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாத வரை இந்தி திணிக்கப்படாது என்ற சட்டப்பாதுகாப்பையும் தந்தது என்று. அது மட்டும் இல்லை என்றால் எத்தனை மொழிகள் இல்லாமல் போயிருக்கும்? அறிவாளிகளே, இந்தியை ஏற்றுக்கொண்டதால் உத்திரப்பிரதேத்தின் இரண்டு மொழிகள் காணாமல் போயிற்று ராமாயணம் முதலில் எழுதப்பட்ட மைதிலி மொழியே உபி ல் இல்லை இப்போது முட்டாளாக இப்பபது உங்கள் விருப்பம், அதை மற்றவர்கள் மீது திணிக்காதீர்.
பாண்டிச்சேரி யில் நவோதய பள்ளி பல ஆண்டுகளாக உள்ளது ....அங்கு தமிழ் அழிந்துவிட்டதா ??...
ஹிந்தி கூட்டணி பேச்சுவார்த்தையில் உங்களுக்கு ஹிந்தி தெரியாவிட்டால் கூட்டத்தை விட்டு வெளியேறலாம் என்று விடியலிடம் சொன்னது பீகார் நிதிஷ் குமார் ....அதற்கு பதிலே சொல்லாமல் வந்தவர்கள் யார் ...
பார்ரா. 200 ஓவா கொத்தடிமைக்கு இருக்கும் முட்டு கொடுக்கும் திறமை மேல்மட்டத்தில் உலாவும் மண்டூகங்களுக்கு இல்லை.
KANNAN 200 ROOVAA AZHUKKALAYAM ADAPPU EDUKKUM MURASOLI THUDAITHA MOOLAIKKU MUTTALAAGA ALAIVADHU UN VIRUPAM.UNNAI PONDRA KEVALATHUKKU GUMMIDIPOONDI THAANDI ULAGAM ILLAI.AAGAVE VERU MOZHI THEVAI ILLAI.
தமிழ்ப் பெயர் சரவணன் என்கிற வழக்கறிஞர் விவாதத்தில் அவமானப்படுத்தப்பட்டார். உங்களுக்கு வட இந்தியப் பெயர் கண்ணன் நீங்கள் ஏன் விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது. திமுகவுக்கு உங்களைப் போன்ற ஒரு புத்திசாலி நபர் தேவை, அந்த எரிச்சல் கொண்ட , மெல்டிங் பாயிண்ட் சரவணன் அல்ல . கண்ணன் என்பது தமிழ்ப் பெயர் என்று சொல்லாதீர்கள், அது சமஸ்கிருதத்தில் உள்ள கானாவின் தமிழ் ஆக்கம் .
இங்கே யாரும் யாருக்கும் நான் முட்டுக் கொடுக்கவில்லை, யாரும் 200ரூ யாருக்கும் கொடுப்பதும் இல்லை, நீங்களும் இரண்டு ரூபாய்க்கு முட்டுக்கொடுக்கவில்லை. அறிவார்ந்த விவாதம் . ஏன் பாஜக வை கேள்வி கேட்போரையெல்லாம் திமுகவில் சேர்த்துவிடுகிறீர்கள்? நீங்களே உங்களுக்கு எதிரிகள் அதிகம் என்று முடிவு செய்துகொள்கிறீர்கள் ?சாதாரணமாக தர்க்க ரீதியாக பதில் சொல்லி உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள்.
SVS, கடைசியில் இந்தியா கூட்டணியில் இருந்து போனது யார்?மேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா