ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!
புதுடில்லி : லோக்சபாவில் விவாத நேரத்தின் போது காங் எம்பி ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் லோக்சபாவில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன.
அதன் விபரம் பின்வருமாறு:
ராகுல் பேசுகையில், "இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது பற்றி, முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயயசரிதை புத்தகத்தை வெளியிடுவதை மத்திய அரசு தடுத்துள்ளது" என தெரிவித்தார்.
ராகுல் பேசி கொண்டு இருந்த போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் குறுக்கீட்டு பேசினர்.
"நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் உள்ளவற்றை அவையில் வாசிக்கக் கூடாது" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆட்சேபனையை ஆதரித்து, ராகுல் தனது கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு ராகுல், "ஆதாரபூர்வமற்ற எதையும் அவையில் நான் குறிப்பிடவில்லை" என தெரிவித்தார்.
ராகுலுக்கு ஆதரவு
பின்னர், "ராகுல் பேச்சில் ஏதாவது தவறு இருந்தால் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கலாம். ஆனால் தடுக்கக்கூடாது" என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.
"சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பேசும்போது ஏன் எதிர்க்கிறீர்கள்" என ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
பாஜவினரும் காங்கிரஸ் கட்சியினரும் போட்டி முழக்கமிட்டதால் லோக்சபாவில் சலசலப்பு நிலவியது.
ராகுலை பேசவிடாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக லோக்சபா மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்துலும் சரி மத்தியிலும் சரி, பாஜக மீது உண்மைக்கு புறம்பானவற்றை வேண்டுமென்றே பொது வெளியில் திரும்ப திரும்ப பேசி ஒரு போலி பிம்பத்தை கட்டமைப்பது திமுக மற்றும் காங்கிரஸின் வியூகம் பிறகு பெரும்பாடு பட்டு அதை பொய் என்று நிரூபிக்க, மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக பிரயத்தன பட வேண்டியதாய் இருக்கு. தமிழகத்துல பாஜக முழுமையாக செயல்படாததால் திமுக கட்டமைக்கும் உருட்டல்களே மக்களை சென்றடைகிறது.
சாணக்கியநீதி: வெளிநாட்டு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை தன் தந்தையின் தேசத்திற்கு எப்போதும் விசுவாசமாக இருக்க மாட்டார். அவர்கள் இந்த நாட்டில் குழப்பம்தான் விளைவிப்பர் அவர்களால் இந்த தேசத்திற்கு ஆபத்துதான் வந்து சேரும். பார்லிமெண்டில் நம் நாட்டைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கும் போது அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த ராகுல்காந்தி நம் நாட்டை கேவலப்படுத்தும் விதமாக சீனாவிடம் கல்வானில் நடந்த சண்டையில் நாம் பெரும்பகுதி நிலத்தை இழந்து விட்டோம் என்று கேரவன் பத்திரிக்கையில் ஒரு Article வந்திருக்கிறது என்று ஒரு பொய்யை கூறி சபையை நடத்தவிடாமல் அமளியை ஏற்படுத்துகிறார். இந்த ராகுல் ஒவ்வொரு முறை பார்லிமெண்ட் நடைபெறும் போதும் இப்படி ஏதாவது பொய்யான காரணங்களை கூறி பாராளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நம்முடைய நாட்டின் பெயரை கெடுக்கிறார்.
கி.மு 300 வருடங்களுக்கு முன்பு அர்த்தசாஸ்த்திரத்தை எழுதிய சாணக்கியரின் வார்த்தை பொய்க்கவில்லை என்பதை இதன்மூலம் ராகுல்காந்தி நமக்கு உணர்த்துகிறார்.
நரவனே சொன்னது நேரு காலத்தில் சீனா ஆக்கிரமித்த 4000 சதுர கி மி நிலத்தை பற்றி
சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியில் புல் கூட முளைக்காது . போனால் போகட்டும் எனப் பேசியது நேரு. அதற்கு ராகுல் மன்னிப்புக் கேட்பாரா?.
Four Stars of Destiny என்ற புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளி இடப்படாத ஒரு புத்தகத்தை பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து பார்லிமென்டில் பேச அனுமதியில்லை.
சீன இந்திய எல்லை இன்னும் வரை அறுக்கப்படவில்லை. அந்த மாதிரி ஆங்கிலேயன் பிரச்னையை உண்டாக்கி விட்டு சென்று விட்டான். எனவே இந்திய பகுதி என்று சொல்லப்படும் பகுதிகளை சீனாவும், சீனாவின் பகுதி என்று சொல்லப்படும் பகுதிகளை இந்தியாவும் பிடித்து வைத்து உள்ளது.
அப்படி இவர் பேச வேண்டும் என்று நினைத்தால், 1962 ல் இவரது தாத்தா காலத்தில் சீனாவிடம் இழந்த பகுதிகளை பற்றியும், 1948 ல் பாகிஸ்தானிடம் இழந்த பகுதிகளை பற்றியும் பேசினால் எல்லாரும் பொது அறிவு பெறுவார்கள்.
Rahuls intention was to corner
the government, but the tables backfired.Propaganda lasts seconds. Facts last forever.
Shah proved it.
உருப்படியற்ற பேச்சு பேசும் ராகுல் காந்தியின் குடியுரிமை மற்றும் இரட்டை பாஸ்போர்ட் பற்றி கேள்வி எழுப்பப்படவேண்டும். பாஜக இனி சும்மா இராமல் தொடர்ச்சியாக நேருவின், ராஜீவின், சஞ்சய் காந்தியின் பாலியல் விளையாட்டுக்களைப் பற்றியும்
நாட்டு பிரிவினை கொடுமைகளை கண்டும் காணாத மாதிரி இருந்த செயல் பாடுகளை பற்றியும் கமெண்ட் அடித்து பேசலாம். இந்த ராகுலிடம் இனி நியாயம் தர்மம் பார்க்கக்கூடாது. பழைய தரவுகளை போட்டுத் தாக்கினால் தான் அடங்குவார்.
பாஜக
Rahul Gandhi tried to push a magazine claim as Narvanes book. Home Minister Amit Shah stood up and named the source in the House. China was at the receiving end during Galwan. Army Chief, Gen.
M. M. Naravane. Yet Rahul Gandhi continues to dismiss former Army Chief views, repeatedly choosing to undermine Indias official position and rely on foreign agencies to shape his political narrative.
நேரு காலத்தில் நடந்த சீன ஆக்கிரமிப்பு பற்றி பேசுங்கள். காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு வித்திட்ட நேருவின் மோசமான ஆட்சி பற்றி பேசுங்கள். இந்தியாவை மொழி வாரியாகவும், ஜாதிவாரியாகவும் பிரித்த நேருவின் மோசமான ஆட்சியை பேசுங்கள். மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பேசுங்கள். காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் எப்படியெல்லாம் பயன்பெற்றது என்பதை பேசுங்கள். துரந்தர் படத்தில் வரும் காட்சிகளை வைத்து பேசலாமா ?
Durandhar events happened in2010மேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா