வார தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைவு

3


சென்னை: சென்னையில் வார தொடக்க நாளான இன்று (பிப்ரவரி 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.


நம் நாட்டிலும் அவற்றின் விலைகள் உச்சத்தை எட்டி வந்தன. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், கடந்த மாதம் ஜனவரி 29ம் தேதி, ஆபரண தங்கம் கிராம், 16,800 ரூபாய்க்கும், சவரன், 1,34,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 425 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

ஜனவரி 30ல் தங்கம், வெள்ளி விலைகள் சற்று குறைந்தன. அன்று, தங்கம் கிராம், 15,850 ரூபாய்க்கும், சவரன், 1,26,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 405 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜனவரி 31ம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு, 950 ரூபாய் குறைந்து, 14,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 7,600 ரூபாய் சரிவடைந்து, 1,19,200 ரூபாய்க்கு விற்பனையானது.



வெள்ளி கிராமுக்கு மீண்டும், 30 ரூபாய் குறைந்து, 320 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (பிப்.,01) ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் சரிவு



அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement