தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா

1

புதுடில்லி: தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே காரணம். பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்க விலைகளில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. முதலீட்டாளர்களுக்கு எந்த குறிப்பிட்ட நாணயத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது. மார்ச் 9ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் திவால்நிலை குறியீடு திருத்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.


நிதிப் பற்றாக்குறை இலக்கு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார நிலைமையைப் பொறுத்து இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசு நிதிப் பற்றாக்குறையை முந்தைய நிதியாண்டை விட குறைவாக நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில், அரசின் முன்னுரிமை வளர்ச்சிதான்
முதலீடுகளை விற்று சொத்துக்களை பணமாக்குதல் வேகம் தொடரும். பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை மேலும் விற்பதை அரசு ஊக்குவிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement