லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி: '' முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகம் குறித்து லோக்சபாவில் பேச என்னை அனுமதிக்கவில்லை. அதில் ராணுவத்தை பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கைவிட்டது குறித்து உள்ளதே காரணம்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி ராகுல், முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் குறித்து பேச முயன்றார். இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பிறகு பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது : நரவானே தனது புத்தகத்தில் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதனை நான் குறிப்பிட்டேன். அது வெளியே வந்தால் பிரதமர் மற்றும் ராஜ்நாத் சிங் குறித்த உண்மை வெளிப்பட்டுவிடும் என்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
புத்தகத்தில் உள்ளவற்றில் 2 அல்லது 3 வரிகளை பற்றி மட்டுமே பேச நினைத்தேன். அது அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தும். ஆனால், அவர்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம். ராணுவத் தளபதியின் வார்த்தை, நமது படைகளின் முக்கிய தலைவர் அவர். பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடனான கலந்துரையாடல் பற்றியது அது.
ராணுவ தளபதி என்ன எழுதினார், பிரதமர் மோடி , மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரிடம் கூறியது என்ன, என்ன உத்தரவு அளித்தனர் என்பது குறித்து அவையில் சொல்ல விரும்பினேன். அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.
ஒரு இஞ்ச் நிலம் கூட சீனாவிடம் விடவில்லை என நரவானே கூறியது விஷயம் இல்லை.அவரிடம் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ன கூறினார் என்பது தான் விஷயம். நிலத்தை எடுத்துக் கொண்டனரா இல்லையா என்பது வேறு விஷயம். நாட்டின் தலைவர் வழிகாட்ட வேண்டும்.அவர் தான் ராணுவத் தலைவர். புத்தகம் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. அதில் உள்ளது அவரின் பார்வை. ராணுவ தளபதியின் சிந்தனை.
ராணுவத் தளபதி சொல்லப் போகும் விஷயத்துக்கு அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். அதில் இருந்து நாம் சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்வோம். நிச்சயம் பிரதமர் குறித்தும், ராஜ்நாத் சிங் குறித்தும் சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்வோம். நாட்டின் தலைமையால், ராணுவம் எவ்வாறு கைவிடப்பட்டது என்பது குறித்தும் நாம் கற்றுக் கொள்வோம். இவ்வாறு ராகுல் கூறினார்.
மேலும்
-
மற்றொரு ஊழல் வழக்கு: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் -பெங்களூரு விமான சேவை ரத்து
-
பிரதமர் மோடி வரும் 12ம் தேதி புதுச்சேரி வருகை
-
நாணயமாக கட்சி நடத்துகிறோம்; மாம்பழ சின்னம் எங்களுக்கு தான்: ராமதாஸ் நம்பிக்கை
-
ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பொன் மாணிக்கவேல் வழக்கு: முடித்துக்கொள்ள கோர்ட் பரிந்துரை