விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி: விஜய்க்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.
தூத்துக்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
தமிழக முதல்வர் இந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ஏதாவது தந்திருக்கிறது என்று இது வரைக்கும் சொல்லி இருக்கிறாரா? சொல்லவே இல்லை. இந்த விமான நிலையம் (தூத்துக்குடி) 350 கோடி ரூபாய். திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் 650 கோடி ரூபாய். பட்ஜெட்டுக்கு முன்னால் 11 வந்தே பாரத் ரயில்கள். 11 மருத்துவக்கல்லூரிகளை இபிஎஸ் கொண்டு வந்தார்.
ஏதாவது வேண்டும் என்று இவர்கள்(முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடுகிறார்) கோரிக்கை வைத்து இருக்கிறார்களா? இன்றைக்கு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது. அதை ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு எல்லாருக்கும் மத்திய அரசு வீடு கொடுக்கிறது. அதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன் சொத்துவரியை கூட்டமாட்டோம் என்று முதல்வர் சொன்னார். ஆனால் சொத்து வரியை 300 சதவீதம் கூட்டியிருக்கின்றனர். மின்கட்டணத்தை கூட்டமாட்டோம் என்றீர்கள்.. ஆனால் 300 சதவீதம் கூட்டியுள்ளனர். அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டு எதுவுமே தரவில்லை என்று சொல்கிறார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அருமையான பட்ஜெட்டை தந்திருக்கிறார். ஆதிச்சநல்லூரில் ஒரு கலாசார மையம் ஏற்படுத்தி தரப்படும் என்று சொல்லியுள்ளார். மருத்துவத்துறைக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதில் இருந்து எந்த எந்த மாநிலத்திற்கு என்று பிரித்து ஒதுக்குவார்கள்.ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்து பார்த்து விட்டு முதல்வர் சொல்ல வேண்டும்.
என்டிஏ கூட்டணி என்றால் பாஜ, அதிமுக, தமாகா என பல கட்சிகள் உடன் இருக்கிறது. இது கூட தெரியாமல் இப்படி பேசிக்கொண்டே இருந்தால் எப்படி?
தம்பி விஜய்க்கு விஷயம் ஒண்ணுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடி இருக்கிறார். ஒரு நாட்டிலே, ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, தமிழகம், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்று தெரியாமல் டான்ஸ் ஆடிட்டு இருந்தால், டான்ஸ் ஆடிட்டே இருக்க வேண்டியது தான்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியில் கூறினார்.
தமிழகம் இனியும் ஏமாறாது
பாஜக வாக்குறுதி படிக்க வேண்டும். கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், நிலங்களின் விலை ஆகியவற்றை கட்டுபடுத்த ஏழைகளும் பயன்படும் வகையில் உச்ச வரம்பு விதிக்க வேண்டும். வரி செலுத்தும் மூத்த அரசியல்வாதிகட்கு பென்சன், ரயில் சலுகை நிறுத்தப்பட வேண்டும்.
அவருக்கு dance மட்டும் தான் தெரியும், நடிக்ககூட தெரியாது. இவரெல்லாம் முதலமைச்சர் ஆனால் நாடு விளங்கிடும்.
வன்முறையில் வெறியாட்டம் ஆடுவதற்குப் பதிலாக டான்ஸ் ஆடுவது தவறில்லை. இறைவனே அம்பலத்தில் ஆடுபவன்தானே?
தமிழ் நாடு உருப்படும். விஜய் நடனத்தை பார்த்தல் போதும். தமிழ்நாடு ஆஹா ஒஹோ என்று ஆகிவிடும். தமிழக தற்குறி முட்டாள்கள்.
சித்தா ஒட்டகம் மேய்க்க போன நாட்டுல ஒழுங்கா அந்த வேலையை மட்டும் பாரு. இறைவனை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.மேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா
-
லோக் சபாவில் ராகுல் சர்ச்சை பேச்சின் மையமான நரவானே யார்; ஒரு ப்ளாஷ்பேக் அலசல்