பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
- டில்லி சிறப்பு நிருபர் -
தமிழகம் - கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் நதி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தமிழகத்தில் இந்த நதி, பெண்ணையாறு என, அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் பாயும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
நதி நீர் என்பது ஒரு தேசிய சொத்து. எந்தவொரு மாநிலமும் அதன் மீது தனிப்பட்ட உரிமையைக் கோர முடியாது. இந்த விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாத காலத்துக்குள் நடுவர் மன்றத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக அரசிதழில் அறிவிப்பை வெளியிட வேண்டும். நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முதன்மையான கோரிக்கையாக இருந்த நிலையில், சட்ட ரீதியில் தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
நீர், நிலம், காற்று, கனிம வளம் தேசிய சொத்து என்பது மாற்று கருத்து இல்லை. அது போல் புராதன கோவில்கள், சுற்றுலா ஸ்தலம் போன்றவை தேசிய சொத்து தான். இதனை தேசிய அமைப்பு தான் மேலாண்மை செய்ய வேண்டும். அரசியல் சாசனம் போது மாகாணம்? கட்ட பஞ்சாயத்து காங்கிரஸ் ஏற்படுத்திய நிர்வாக குழப்பம் தீர்க்க வாக்கு முறை மாற்றம் செய்ய வேண்டும். மாற்றம் செய்ய வில்லை என்றால், எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அதிக நேரம் தாவாவில் கழியும். வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.மேலும்
-
மற்றொரு ஊழல் வழக்கு: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் -பெங்களூரு விமான சேவை ரத்து
-
பிரதமர் மோடி வரும் 12ம் தேதி புதுச்சேரி வருகை
-
நாணயமாக கட்சி நடத்துகிறோம்; மாம்பழ சின்னம் எங்களுக்கு தான்: ராமதாஸ் நம்பிக்கை
-
ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பொன் மாணிக்கவேல் வழக்கு: முடித்துக்கொள்ள கோர்ட் பரிந்துரை