ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் -பெங்களூரு விமான சேவை ரத்து
புதுடில்லி: லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்ச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் விமானிகளில் ஒருவர் போயிங் 787-8 விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தார். இதையடுத்து லண்டனில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட வேண்டிய அந்த விமானத்தின் சேவை, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த விஷயம் விமான ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ-வுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிசிஏவின் உத்தரவுக்குப் பிறகு, ஏர் இந்தியா தனது விமானக் குழுவில் உள்ள அனைத்து போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சுகளையும் சரிபார்த்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த பயணிகள் கடந்த ஆண்டு நடந்த ஆமதாபாத் விபத்தினை நினைவுகூர்ந்து உள்ளனர். லண்டனுக்குச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேர் உட்பட 260 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்திற்கு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வேளை. கெளம்பறதுக்கு முன்னாடி கண்டுபுடிச்சாங்களே
கோளாறு இல்லாத ஏர் இந்தியா விமானம் இருக்குதா?