நாணயமாக கட்சி நடத்துகிறோம்; மாம்பழ சின்னம் எங்களுக்கு தான்: ராமதாஸ் நம்பிக்கை
திண்டிவனம்: 'நாங்கள் நாணயமாக கட்சியை நடத்துகிறோம். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 31ம் தேதியிலிருந்து நிறுவனர் ராமதாஸ் நேர்காணல் நடத்தி வருகிறார். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், நீலகிரி,மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை என 13 மாவட்டங்களை சேர்ந்த 600 பேரிடம் இன்று நேர்காணல் நடந்தது.
பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்றால் அது வெற்றி கூட்டணியாக தான் இருக்க வேண்டும். பா.ம.க.,வின் மாம்பழ சின்னம் யாருக்கு என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு பிரிவினர், பதர்கள் தங்களுக்குதான் மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று சொல்கின்றனர். நாங்கள் நாணயமாக கட்சியை நடத்துகிறோம். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
வயசாயிட்ட ஓய்வு எடுத்துக்கணும் பெண் ஆசையால் கட்சி காலி
நாணயம் .. சரி தான் நாணயத்துக்காகத்தான் ஜாதிச்சங்கக்கட்சி வேறெதற்கு?
நாணயமாக கட்சி நடத்துகிறார்கள் என்று மக்கள் கூறவேண்டும். நீங்களே தற்பெருமை பேசக்கூடாது.
நாணயமாக அல்ல, நாணயத்திற்காக அதாவது டப்புக்காக.மேலும்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி
-
யுபிஐ பயன்பாட்டில் புது உச்சம்: ரூ.230 லட்சம் கோடி பணப்பரிமாற்றம்
-
அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்