ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெல்போர்னில் ரோவில் பகுதியில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாதவர்கள், அதை பின்னர் தூக்கிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

,இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கையில் கூறி உள்ளதாவது;

மெல்போர்னில் உள்ள ரோவில்லில் ஆஸ்திரேலியா-இந்தியா கலாசார மையத்தில் உள்ள காந்தி சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி அகற்றி உள்ளனர். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த விஷயத்தை நாங்கள் ஆஸ்திரேலிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். காணாமல் போன சிலையை மீட்கவும், குற்றவாளிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை வலியுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement