போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
புதுடில்லி: '' நமது அண்டை நாடுகள், அமெரிக்கா உடன் போட்டி போடும் நாடுகளை விட இந்தியா பெற்ற வர்த்தக ஒப்பந்தம் சிறந்தது. இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக நேற்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன.
அவமதிப்பு
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இது குறித்து பார்லிமென்டில் பேச விரும்பினோம். ஆனால், பார்லிமென்டில் இன்று நாம் நடந்த அவமானகரமான காட்சியை பார்த்தோம். ராகுல் தலைமையில் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியன பார்லிமென்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டன.
@block_P@சபாநாயகர் இருக்கையை நெருங்கியதுடன் அவரை அவமானப்படுத்தினர். ராகுலுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் தான் ஒப்பந்தம் குறித்து பார்லிமென்டில் பேசாமல், இங்கு வந்து பேசுகிறோம்.
block_P
சிறந்தது
அதிபர் டிரம்ப் உடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு மற்றும் நட்பை பயன்படுத்தி வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதி செய்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
நமது அண்டை நாடுகள், சுற்றி உள்ள நாடுகள், அமெரிக்கா உடன் போட்டியிடும் நாடுகள் பெற்றுள்ள ஒப்பந்தத்தை விட இந்தியா பெற்றுள்ளது மிகச் சிறப்பான ஒப்பந்தம் ஆகும். நம் அனைவருக்கும் சிறந்த ஒப்பந்தம் இது.
விவசாயிகள் நலன்
அனைவர் சார்பாக நான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி உறுதி செய்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருளாதாரம், 140 கோடி மக்கள், ஏழைகள் விவசாயிகள், மீனவர்கள், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும்.
கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயம் மற்றும் பால்வளத்துறையின் நலனை பிரதமர் மோடி கவனத்தில் கொண்டுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்திலும், விவசாயம் மற்றும் பால்வளத்துறை நலனை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்துக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
@block_B@விவசாயம் மற்றும் பால்வளத்துறையினருக்காக பிரதமர் மோடி எப்போதும் உழைத்து வருவதுடன், அவர்களின் நலன்களை உறுதி செய்யவும், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்காகவும், அவர்களின் துறையில் பல வாய்ப்புகளை கிடைக்கவும் உழைத்து வருகிறார். ஒட்டுமொத்த நாடும் இதனை புரிந்து கொண்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
block_B
மகிழ்ச்சி
விவசாயம் மற்றும் பால்வளத்துறை உள்ளிட்ட இந்திய பொருளாதாரத்தின் முக்கிய காரணிகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இந்த ஒப்பந்தத்தால் பரந்த அளவில் உற்சாகம் ஏற்பட்டு உள்ளதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செய்திகள் வெளியாகின்றன. ஏற்றுமதி, ஐடி துறை, நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள், சர்வதேச திறன் மையங்களை அமைப்பவர்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்பவர்கள், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாளர் துறை என அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
@block_Y@இந்த ஒப்பந்தம் மூலம் சிறுகுறு தொழில்துறை, பொறியியல் துறை, வாகன உதிரி பாகங்கள், மின்னணு பாகங்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவுக்கு விற்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் விற்க உள்ளவர்கள், ஜவுளித்துறை, ஆபரணங்கள், தோல் பொருட்கள் என அனைவருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
block_Y
துரதிர்ஷ்டம்
ராகுல் போன்ற எதிர்மனநிலை கொண்டவர்கள், நாட்டை தவறாக வழிநடத்தவும், குழப்பம் செய்யவும் முயற்சி செய்வது துரதிர்ஷ்டவசமானது. பொய் சொல்லும் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது. நாடு முன்னேறி செல்கிறது. உலகில் அதிகேவமாக பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தை சீர்குலைத்ததுடன், மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கி, வளர்ச்சியை நிறுத்தினர்.
@block_G@
ராகுல் எதிர்மறை எண்ணங்களின் சின்னம். அவருடன் திமுக, திரிணமுல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கைகோர்த்து நாட்டின் எதிர்காலம் இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், அமெரிக்காவில் இருந்து நமக்கு கிடைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மீது அவர்கள் பொறாமை போடுகிறார்கள் போல் தெரிகிறது. அதிக செயல்திறன் கொண்ட தரவு மையங்கள் இந்தியாவுக்கு வரலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க முடியும். இதில் ராகுலுக்கு என்னபிரச்னை?. ராகுல் நாட்டின் முன்னேற்றத்தை வெறுக்கிறார்.block_G
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மணிப்பூர் முதல்வராகிறார் யம்நம் கெம்சந்த் சிங்
-
இந்தியாவுடன் ஒப்பந்தம்: பிரிட்டன் பார்லி. குழு மகிழ்ச்சி
-
தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 1500 பேருக்கு டெங்கு, 206 பேருக்கு எலி காய்ச்சல்; சுகாதாரத்துறை தகவல்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி