யுபிஐ பயன்பாட்டில் புது உச்சம்: ரூ.230 லட்சம் கோடி பணப்பரிமாற்றம்
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: உள்நாட்டுபணப்பரிமாற்றம் முக்கியமானது. 2025 - 26 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. 2022 - 23 ம் நிதியாண்டில் ரூ.139 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்தது. தற்போது யுபிஐ இந்தியாவை தாண்டி எட்டு வெளிநாடுகளில், உள்ளூர் சட்டங்களின்படி பயன்படுத்தப்படுகிறது எனக்கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பூடான், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், கத்தார், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.
யுபிஐ முறையை சர்வதேச அளவில் விரிவபடுத்த மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ சர்வதேச பணப்பரிமாற்றம் கழகம்(NIPL) இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டு உலகளாவிய அறிக்கையின்படி, உலகளவில் நடக்கும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் யுபிஐ மூலம் மட்டும் 49 சதவீதம் நடைபெறுகிறது என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
மணிப்பூர் முதல்வராகிறார் யம்நம் கெம்சந்த் சிங்
-
இந்தியாவுடன் ஒப்பந்தம்: பிரிட்டன் பார்லி. குழு மகிழ்ச்சி
-
தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 1500 பேருக்கு டெங்கு, 206 பேருக்கு எலி காய்ச்சல்; சுகாதாரத்துறை தகவல்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்