சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் போக்சோவில் கைது

கோட்டக்குப்பம்: சிறுமியிடம் சில்மிஷம் செய்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுமி, கடந்த ஜன., 31ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தகுமார், 30; என்பவர், சிறுமியின் வீட்டில் குழாயை சரி செய்ய வந்ததாக கூறி அவரிடம் அத்துமீறினார்.

சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஆனந்தகுமார் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement