தேரோட்டத்தில் மரியாதை: இன்ஸ்., நெகிழ்ச்சி
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் விழாக்கள் அனைத்தும், சென்னிமலை டவுன் கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவிலிலும், அதேபோல் திருத்தேரோட்டமும் நான்கு ராஜவீதிகளில் தான் நடக்கும். இதில் தேர் வடம் பிடிக்கும்போது, போலீஸ் ஸ்டேசன் சென்று போலீசாரை அழைத்து வருவது, நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து, மரியாதை அளித்து, ஸ்டேஷன் வரை கொண்டு சென்று விடும் பழக்கம், நுாற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது.
நடப்பாண்டு தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை முடிந்தது. இதை தொடர்ந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள-தாளம் முழங்க, கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள், ஊர்வலமாக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விட்டனர். ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு செல்லும் தேரோட்டி, கோவில் பணியாளர்களுக்கு, ஸ்டேசனில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மரியாதை செய்யப்படும். இதுவும் பழமை மாறாமல் நடந்தது. இந்த பாராட்டால், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நெகிழ்ச்சி அடைந்தார். ''நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு கிடைத்த இந்த நடைமுறையும், மரியாதையும் புதுமையாக உள்ளது. மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது,'' என்றார்.
மேலும்
-
போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை
-
எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு
-
எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்
-
என்.எப்.ஓ., : பஜாஜ் லைப் இன்சூரன்ஸ் புதிய 'இண்டெக்ஸ் பண்டு'
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு; அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்