குறைதீர் நாள் கூட்டம் 1,255 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம், டி.ஆர்.ஓ., அரிதாஸ் தலைமையில் நடந்தது. முக்கிய அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். மனுதாரர்கள் முன்னிலையில் விசாரித்து, அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இக்குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 1,255 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், சப் கலெக்டர் முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement