பாதுகாப்பு பணியில் 650 போலீசார் தீவிரம் 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் பகுதியில், நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திண்டிவனம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட திட்டப்பணிகளையும் துவக்கி வைக்கிறார்.

முன்னதாக, விழாவிற்கு வரும்போது, திண்டிவனம் செஞ்சி சாலையில் ரோட் ஷோவிலும் முதல்வர் பங்கேற்கிறார்.

முதல்வர் விழாவிற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் எஸ்.பி., சாய்பிரனீத், கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஐ.ஜி., அஸ்ராகார்க், டி.ஐ.ஜி., அருளரசு ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement