தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் 1,315 கோடி கிலோ அரிய கனிமம்
புதுடில்லி: தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், 'மோனசைட்' என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
பார்லிமென்டில், மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கடற்கரை மணல்
இந்நிலையில், இத்திட்டம் பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:
நம் நாட்டில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் குறிப்பிடத்தக்க அரிய வகை கனிம வளங்களை அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் உள்ள கடற்கரை, செம்மண் மற்றும் வண்டல் மண்ணில் 'மோனசைட்' என்ற அரிய வகை கனிமம் இருப்பதை உறுதிப்படுத்திஉள்ளது.
இந்த எட்டு மாநிலங்களில் உள்ள படிமங்களில் மட்டும் 1,315 கோடி கிலோ மோனசைட் கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கடற்கரை, செம்மண் மற்றும் உள்நாட்டு வண்டல் மண்ணில், 723 கோடி கிலோ அளவு அரிய மண் ஆக்சைடு வளங்கள் இருப்பதாகவும், கூடுதலாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள கடினப் பாறைகளில், 129 கோடி கிலோ அளவில் அதே வளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மோனசைட், கதிரியக்கத் தனிமங்களான யுரேனியம் மற்றும் தோரியத்துடன் தொடர்புடையதால், அது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகக் கருதப்படுகிறது.
தொழில்நுட்பமின்மை அதற்கான சுரங்கம், பதப்படுத்துதல், சுத்திகரிப்பு ஆகியவை மத்திய அரசின் கடும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அரிய கனிம வளங்கள் துறையில், உலகளவில் இந்தியா, முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
நம் நாட்டில் அரிய கனிம வளங்களும், பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான திறன்கள் இருந்தாலும், போதுமான தொழில்நுட்பமின்மை, அவற்றை உலக சந்தைக்கு ஈடாக மாற்ற முடியாத நிலை இருப்பதால், இந்தக் கனிமங்களின் வணிகச் சுரங்கம் மற்றும் பதப்படுத்துதல் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
But What Done Sofar to Extract Nuclear Fuels Instead of Begging from Others???
ஐயோ நாங்கள் கனிமம் எடுக்க விடமாட்டோம், அதை கொள்ளையடிக்க ஏகபோக உரிமை எங்களுக்கே. இந்த ஒன்றிய அரசு கனிமம் எடுக்க முயற்சித்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் போகும், விலை நிலம் பாழாகும், கால்நடைகள் மடியும் எனவே இதை நாங்கள் எதிர்க்கிறோம்
விடுவார்களா... வந்து விடுவார்களே... ஒப்பாரி வைக்க... சுற்றுச்சூழல் & ஆமை முட்டை போடும் இடம் பவளப்பாறை, மீன் குஞ்சு பொரிக்கும் இடம் என அர்பன் நக்சல்கள் கூட்டம் டூட் கிட் தயாரிக்க ஆரம்பித்து இருப்பார்களே.. முதலை கண்ணீர் வடிக்க கோபாலபுரம், அதன் கொத்தடிமை கட்சிகள், ஏவல் நாய்கள் எல்லாம் ரெடி..
திருட்டு கள்ள ரயில் குடும்பத்துக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்
அடித்தது யோகம் நம்ம ஜி. சதுரத்துக்கு. இனி கடற்கரைகள் விற்பனைக்கு
இந்த விஷயத்தை மாடல் ஆட்சியாளர்களிடம் சொல்ல வேண்டாம். பல புலிகள் ஒரு மானை தின்னும் காட்சி ஆகிவிடும்.
திருடர்கள் ஜாக்கிரதை
இவளவு கனிமம் இருப்பது டிரம்ப் ஐயாவுக்கு தெரிந்தால் இந்திய மாநிலங்களையும் கைப்பற்ற வருவார்,
சீன கைக்கூலிகள் எதையும் எடுக்க விடமாட்டார்கள். டங்ஸ்டன் முதல் தாமிரம் வரை தடுப்பார்கள். சீனா காசுக்காக சொந்த நாட்டை எதிர்க்கும் நாதாரிகள். மீசை கோவாலு முதல் தொல்காப்பிய பூங்கா ஜால்ரா பத்திரிகை ஆசிரியர் வரை
நீங்க காலையில் எழுந்து இப்படியே சீனா பாகிஸ்தான் என்று புலம்புங்க, இன்னோரு கூட்டம் சங்கிகள் என்றும், இன்னொரு கூட்டம் திராவிடன் என்று பேசிக்கிட்டே இருங்க, சீனா ஒவொரு நிமிடமும் எண்ணத்தை கண்டுபிடிக்கலாம் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறான்,
கமிஷன் வெட்டுங்க பொருளை கட்டுங்க என்பதே ஸ்டெர்லைட் மூடுவதர்கான முக்கிய காரணம். சுற்றுசூழல் பாதிப்பு என்பதல்லாம் ஓர் உடான்ஸ். சுற்றுசூழல் பாதிப்பு முக்யமென்றால் அவர்கள் முதலில் மூடவேண்டியது பாலார் மற்றும் அதை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விளை நிலங்களை நாசம் செய்த தோல் தொழிற்சாலைகளைத்தான்.
கருப்பு துண்டுவை விட்டுடீங்களே