வெட்டுக்காட்டில் தைப்பூச திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு வள்ளலார் ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா நடந்தது.

அதனையொட்டி, ஞான சபையில் நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சபையின் நிர்வாக தலைவர் ராமசாமி தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முகுந்தன், பேரவை செயலாளர் ஜோதி ராஜா, தி.மு.க., நிர்வாகிகள் நந்தகுமார், அருண், தன்னார்வலர்கள் பாலசுப்ரமணியன் வைத்தியலிங்கம் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement