போட்டி நாடுகளை காட்டிலும் குறைந்த வரி; அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்!
புதுடில்லி: போட்டி நாடுகளை காட்டிலும், இந்தியாவுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க சந்தை இனி நம் வசமாகும் என்கின்றனர், ஏற்றுமதியாளர்கள்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நேற்று இரவு இறுதி செய்யப்பட்டது. அதன்படி இந்தியப் பொருட்களின் மீதான வரி விதிப்பு, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று, தொழில் துறையின் பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். வரிக்குறைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஒவ்வொன்றாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த வேளாண்மை, பால் பொருட்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்நாட்டு உற்பத்தியாளர் நலன் கருதி, வேளாண்மை, பால் பண்ணை பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா அனுமதி கொடுப்பதில்லை. எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு இது தான். நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நிலைப்பாடு, இப்போதும் தொடர்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் அதிகாரிகள் தரப்பில் பேச்சு நடந்து வருகிறது.
அதன் முடிவில் தான், துறை வாரியாக, பொருட்கள் வாரியாக வரி விதிப்பு விவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லை என்று இந்தியா உறுதி அளித்துள்ளதாக, அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். ஆனால், பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் அத்தகைய உறுதி எதுவும் அளிக்கப்படவில்லை; டிரம்புக்கு நன்றி மட்டுமே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த துறைகளுக்கு நன்மை
அமெரிக்க வரிக்குறைப்பானது, இந்தியாவில் இருந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்வோருக்கு பேருதவியாக இருக்கும். இந்த துறையில் போட்டியிடும் வங்கதேசம் ( 20 சதவீதம்), வியட்நாம் (20 சதவீதம்), பாகிஸ்தான் (19 சதவீதம்), சீனா (34 சதவீதம்) போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இன்ஜினியரிங் பொருட்கள், ரசாயனம், முத்துக்கள், வைரம் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி செய்யும் துறையினரும் வரிக்குறைப்பால் பயன் பெறுவர். இப்படி போட்டி நாடுகளை காட்டிலும், குறைந்த வரி விதிப்பு இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இனி அமெரிக்க சந்தை நம் வசமாகும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மற்ற நாடுகளை விட அமெரிக்காவுக்கு 0 முதல் 10 சதவீதம் தான். அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கே அதிகரிக்கும்.
புல்லரிக்குது
சந்தோஷம். இருந்தாலும் எதிர் கட்சிகள் கத்துவதை போல் என்னென்ன பொருட்கள் நாம் வாங்குமவோம் என்ற வெளிப்படை தன்மை வந்தால் நல்லது
இது தான் மோடி ஜி
தற்போதைய நிலையில் பிரதமரின் அணுகுமுறை வெற்றிமேலும்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி
-
யுபிஐ பயன்பாட்டில் புது உச்சம்: ரூ.230 லட்சம் கோடி பணப்பரிமாற்றம்
-
அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்