நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்
திருநெல்வேலி: சென்னையில் நடந்த த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகன் பக்திப் பாடலை விஜய்யை உருவகப்படுத்தி பாடியதாக, பாடகர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் மீது இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயல் சமூக ஒற்றுமைக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (13)
Venkitaswsmy Rangaswamy - ,இந்தியா
04 பிப்,2026 - 14:08 Report Abuse
முருகன் தமிழ் கடவுள். தமிழர் அனைவருக்கும் சொந்தம். 0
0
Reply
Sivaji ganesan - ,இந்தியா
03 பிப்,2026 - 20:30 Report Abuse
விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை ஆனால் அவர் கூட இருக்கும் நபர்கள் மீது மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது.... எல்லாரும் திருட்டு க்கூட்டமாக இருக்கிறார்கள்.. 0
0
Reply
Sivaji ganesan - ,இந்தியா
03 பிப்,2026 - 20:25 Report Abuse
விஜய்க்கு என்ன.... எந்த கட்டுப்பாடும் இல்லை..௪௧ பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது இவங்களுக்கு சர்வசாதாரணம்... 0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
03 பிப்,2026 - 20:04 Report Abuse
என்ன பாடல் விவரம் என்ன 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
03 பிப்,2026 - 17:32 Report Abuse
நீங்க கூவி என்ன பயன் அந்த ஜந்துக்கள் அதைத்தான் செய்யும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது ஏன்னா இந்த ஆட்சியே அல்லேலூயா ஆட்சி தான் 0
0
Reply
GMM - KA,இந்தியா
03 பிப்,2026 - 14:50 Report Abuse
ஜோசப் விஜய் புகழ் பாட இந்து,கிறித்துவ, இஸ்லாமிய பக்தி பாடல் பாடலாம். ஏன் முருக பக்தி பாடல் மட்டும். மக்கள் இருப்பிடம் சார்ந்த மத அரசியல் வெற்றிக்கு உதவும்.? ராகுல் கிருத்துவர்? கேரளாவில் இசுலாமியர் அதிகம் வாழும் இடத்தில் வெற்றி பெற்றார். அரச கட்டளை போல் சிறுபான்மை மத தலைவர் கட்டளை வாக்கு வங்கியாக மாறுகிறது. ?முதலில் இந்து மக்கள், கிறித்துவ மதம் தழுவும் போது இந்து - கிறித்துவர் என்று பதிய வேண்டும். அது போல் கலப்பு மணம். மத்திய அரசு ஒரு துறை ஏற்படுத்த முடியும். இவர்கள் சலுகைக்கு விதிமுறை வகுக்க வேண்டும். 0
0
Reply
ஆருயிர்த்தோன் - ,
03 பிப்,2026 - 14:38 Report Abuse
என்னை மாதிரி உண்மையான இந்து பெருமக்கள் அனைவருக்கும் புண்பட்டுச்சி...இந்துக்கள் மூடிட்டு இருந்ததெல்லாம், அந்தக் காலம்...இனி உங்களது ஒவ்வொரு சேட்டைக்கும் எதிர்வினை இருக்கும்... ஜெய் பாரத்... 0
0
Reply
Raj Kamal - Thiruvallur,இந்தியா
03 பிப்,2026 - 14:21 Report Abuse
அடடா என்னே உங்க பக்தி? ஆவூன்னா இந்து மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டுள்ளது. எங்க, யாருக்கு புண்பட்டுள்ளது? அப்படி ரொம்ப புண்ணாயிடுச்சின்னா போய் ஆஸ்பத்திரியில் காண்பிக்கவும். 0
0
Kannan - ,இந்தியா
03 பிப்,2026 - 14:38Report Abuse
புண்ணாக்கு 0
0
Madras Madra - Chennai,இந்தியா
03 பிப்,2026 - 14:55Report Abuse
பல ஆயிரம் பேருக்கு கண்டிப்பாக புண்ணாயிருக்கும் மன புண்ணுக்கு இன்னும் ஊசி கண்டு பிடிக்கவில்லை வள்ளுவன் வாக்கு தெரியாதா ? நாவினால் சுட்ட வடு ஜோசப் விஜய் க்கு தெரியாது போல 0
0
N.Purushothaman - Cuddalore,இந்தியா
03 பிப்,2026 - 14:57Report Abuse
அப்போ எம்பெருமான் முருகனுக்கு ஒப்பானவனா உங்க நடிகன் ? அருவருப்பா இல்லை ? 0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
03 பிப்,2026 - 16:43Report Abuse
நான் எங்கடா அவனுக்கு சப்போர்ட் பண்ணேன்? நீங்களா ஒன்னு புரிஞ்சுகிட்டு அதுக்கு இங்க வந்து ஒப்பாரி வேற? அவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் சொல்வது இந்த இந்து மத உணர்வுகள் புண்படுதல் பற்றி மட்டும் தான். 0
0
BHARATH - TRICHY,இந்தியா
03 பிப்,2026 - 16:51Report Abuse
உங்களுக்கு வெக்காமா இல்லை. கண்டிப்பா முருகன் தண்டிப்பார். அவன் மதத்துக்கு அவன் உண்மையா இருக்கான். உன்னை மாதிரி முட்டாள்களை அவன் பயன்படுத்திட்டு இருக்கான். 0
0
Reply
மேலும்
-
காளியம்மன் கோயில் நிலத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
துறை நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்: முதல்வர் கடும் கோபம்
-
இரவு முழுதும் திகிலுாட்டிய தீயில் 1,000 வீடுகள் சாம்பல்
-
அமெரிக்க அதிபரை கொல்ல முயன்றவருக்கு 'ஆயுள்'
-
தலைவிரித்தாடும் பஞ்சம் 42 லட்சம் பேர் பட்டினி
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம் உக்ரைன் அதிபர் தகவல்
Advertisement
Advertisement