மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்

ப வுஞ்சூர் அருகே நெமந்தம் ஊராட்சியில், பாக்குவாஞ்சேரி காலனி உள்ளது. இங்குள்ள பாக்குவாஞ்சேரி மடுவிற்கு முன்புறம் உள்ள சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மின்வாரியத்தினர் மின்கம்பங்கள் நட்டனர்.

தற்போது அதில் ஒரு மின்கம்பம், சாய்ந்த நிலையில் அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
- அதியமான், நெமந்தம்.

Advertisement