அமெரிக்கவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
மும்பை: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தையில் கிடுகிடு உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில் துறைக்கு அபார வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3500 புள்ளிகள் (4.4 சதவீதம்) அதிகரித்தது. 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை கொண்ட நிப்டி இன்டெக்ஸ், 4.7 சதவீதம் இன்று காலை உயர்ந்தது.
அதானி பங்குகள் விலை
பங்குச்சந்தையில், குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை 13 சதவீதம் விலை அதிகரித்தது. அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன், அதானி பவர், அதானி எனர்னி சொல்யூசன்ஸ் என அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் தாறுமாறாக விலை உயர்ந்து வருகின்றன.
ரூபாய் மதிப்பும் உயர்வு
அதேபோல, கடந்தாண்டில் சரிந்து கொண்டே வந்த இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சதவீதம் அதிகரித்தது. இன்று காலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.29 ரூபாயாக இருந்தது.
இதுதான் மோதியின் மதி.. இங்குள்ள மதி கெட்டவர்களுக்கு இது புரியாது ...மேலும்
-
லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
-
நாவலுார் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
-
தனியார் கட்டிய தடுப்பணையை அகற்றும் வனத்துறை
-
சென்னையில் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன்; போதை மாடல் அரசு என நயினார் கண்டனம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் குறைந்த வரி; அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்!
-
நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்