சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

28


சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தான். வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் நிருபர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

கேள்வி: மத்திய பட்ஜெட்டின் முழு விபரம் வெளியாகி இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?




முதல்வர் ஸ்டாலின்: அதான் ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தான். மாற்றம் வருமா என்று பார்த்தோம் எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்து இருக்கிறது.



கேள்வி: தமிழகத்தில் இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், ஆனால் பெரிதும் ஏதும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லையே?



முதல்வர் ஸ்டாலின்: வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.


கேள்வி: கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு எப்போது தொடங்கும்?
முதல்வர் ஸ்டாலின்: விரைவில் தொடங்கும்


கேள்வி: அரசியலில் புதிய எதிரிகள் வந்துள்ளார்களா?

முதல்வர் ஸ்டாலின்: நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை. அனைவரையும் நண்பர்களாக தான் பார்க்கிறேன். மதிக்கிறேன்

Advertisement