25,200-ஐ தாண்டினால் 25,500 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது
நண்பகல் 12:00 மணி வரை சிறு சிறு ஏற்ற இறக்கங்களை கண்ட நிப்டி, அதற்கு மேல் தொடர்ந்து ஏற்றமடைந்து, நாளின் இறுதியில் 262 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.22 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப்' குறியீடு குறைந்தபட்சமாக 0.14 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 2.13 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.47 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,286 பங்குகளில், 1,549 ஏற்றத்துடனும்; 1,638 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு கீழேயே வர்த்தகமாகிறது. டெக்னிக்கலாக ஆர்.எஸ்.ஐ., ஓவர்சோல்ட் எனும் நிலையில் இருந்து மீண்டு கொண்டிருப்பது, விற்பனையின் தீவிரம் குறைந்திருப்பதை காட்டுகிறது.
25,200 என்ற லெவலை வேகமாக தாண்டும் பட்சத்தில், நிப்டி 25,500- - 25,650 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
மேலும்
-
மணிப்பூர் முதல்வராகிறார் யம்நம் கெம்சந்த் சிங்
-
இந்தியாவுடன் ஒப்பந்தம்: பிரிட்டன் பார்லி. குழு மகிழ்ச்சி
-
தமிழகத்தில் ஜனவரியில் மட்டும் 1500 பேருக்கு டெங்கு, 206 பேருக்கு எலி காய்ச்சல்; சுகாதாரத்துறை தகவல்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்