பிரமாண்டமான தைப்பூச காவடி உள்ளூர் பக்தர்கள் தரிசனம்

ஊட்டி: ஊட்டி அருகே காந்தள் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி, பிரமாண்டமான காவடி வைத்து, வழிபாடு நடந்தது. அப்பகுதியில், 51 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 4 அடி அகலத்தில் மிக பெரிய காவடி முருக பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, முருக பெருமானுக்கு இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை காந்தள் தெய்வீக விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement