வேதகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உத்சவம் விமரிசை

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், தைப்பூச தெப்போத்சவம் கண்டார்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இரவு, கோவிலில் இருந்து சுவாமியர் புறப்பட்டு, சங்கு தீர்த்த குளக்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தில் வலம் வந்தனர்.

பின்னர் வீதிகளில் உலா சென்றனர்.

நேற்று, கோவில் வளாக ரிஷப தீர்த்த குளத்தில் தெப்போத்சவம் கண்டனர். திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

Advertisement