ததும்பும் மார்லிமந்து அணை கோடையை சமாளிக்கலாம்
ஊட்டி: ஊட்டி மார்லிமந்து அணையின் முழு கொள்ளளவான, 23 அடியை எட்டி ததும்பி காணப்படுகிறது.
ஊட்டி நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
'இதை தவிர தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகள்,' என, 4,000 வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் நகராட்சி மூலம் வினியோகிக்கப்படுகிறது.
இதற்கு, பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய அணைகள் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், ஊட்டி நகரின் பல வார்டுகளின் குடிநீர் தேவையை பூத்தி செய்யும்மார்லிமந்து அணையின் உயரமான, 23 அடியில் தண்ணீர் முழு கொள்ளளவில் ததும்பி காணப்படுகிறது. இதனால், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை.