தரமணி பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தரமணி: தரமணி பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி பிரதான சாலை, 200 அடி அகலம் கொண்டது. தாம்பரம், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அண்ணா சாலைக்கு முக்கிய வழித்தடமாக, இந்த சாலை உள்ளது.
ஆக்கிரமிப்பால், சாலை 60 முதல் 110 அடியாக சுருங்கியது. இதனால், விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்தனர். ஆனால், அதற்கான ஊழியர்கள், உபகரணங்கள், வாகனங்கள் இல்லாததால், மாநகராட்சி உதவியை நாடினர்.
இதையடுத்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று, தரமணி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதே இடத்தை மீண்டும் ஆக்கிரமித்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தனர்.
மேலும், இதர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடுத்தடுத்த நாட்களில் அகற்றப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
-
நாவலுார் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
-
தனியார் கட்டிய தடுப்பணையை அகற்றும் வனத்துறை
-
சென்னையில் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன்; போதை மாடல் அரசு என நயினார் கண்டனம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் குறைந்த வரி; அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்!
-
நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்