தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 03) மாலையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு செய்ததால், அவற்றின் விலைகள் நம் நாட்டில் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வந்தன. கடந்த மாத இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலைகள் சற்று குறைந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 31) ஆபரண தங்கம் கிராம் 14,900 ரூபாய்க்கும், சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையாகின.
வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (பிப்ரவரி 02) தங்கம் விலை கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 7,600 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிவடைந்து, 2 லட்சத்து 80,000 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மாலை (பிப்ரவரி 03) 22 காரட் ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லடசம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
வாசகர் கருத்து (2)
சதுஷ் - ,
03 பிப்,2026 - 20:20 Report Abuse
தடையற்ற ஒபந்தம் கையெழுத்தானதின் எதிரொலி... 0
0
Reply
ரங்கராஜ் கரூர் - ,
03 பிப்,2026 - 12:49 Report Abuse
இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தான் செய்யும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர் 0
0
Reply
மேலும்
-
'தினமலர்' செவ்வாய் கிரகத்திலும் வெளியாகும்
-
மூலப்பொருள் விலை அதிகரிப்பால் கொசுவலை தயாரிப்பாளர்கள் கவலை
-
'ஸ்டீல் இறக்குமதிக்கு வரி குறையாவிட்டாலும் தேவை உயர வாய்ப்பு'
-
இருசக்கர வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு
-
டாடா உப்பு உற்பத்தி ஆலை ராமநாதபுரத்தில் அமைகிறது
-
சட்டங்களை மதிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! 'வாட்ஸாப்' நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement