என்.எப்.ஓ., : பஜாஜ் லைப் இன்சூரன்ஸ் புதிய 'இண்டெக்ஸ் பண்டு'

'பஜாஜ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 'பஜாஜ் லைப் பி.எஸ்.இ., 500 குவாலிட்டி 50 இண்டெக்ஸ் பண்டு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் லைப் 'ஸ்மார்ட் வெல்த் கோல், சுப்ரீம், கெயின்' ஆகிய மூன்று 'யுலிப்' திட்டங்களின் கீழ் இந்த பண்டு வழங்கப்படுகிறது.
எனவே, இந்த யுலிப் திட்ட பாலிசிதாரர்கள் மட்டுமே இந்த பண்டில் முதலீடு செய்ய முடியும். தகுதி உடையவர்கள், இந்த புதிய பண்டில் வரும் பிப்ரவரி 15 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பண்டின் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 2,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 'பி.எஸ்.இ., 500' குறியீட்டில் உள்ள நிறுவனங்களில், சிறந்த நிதிநிலை மற்றும் முதலீட்டின் மீதான வருவாய் அடிப்படையில், முதல் 50 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காலாண்டிலும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்த பட்டியல் மறுசீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement