இருசக்கர வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு

சென்னை : இருசக்கர வாகன விற்பனை, நடப்பாண்டில் சிறப்பாக துவங்கி உள்ளது. அதாவது, கடந்த ஜனவரி மாத இருசக்கர வாகன விற்பனை, 26.40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 14.49 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜனவரியில், 18.31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான, ஹீரோ, ஹோண்டா இடையே கடும் போட்டி தொடர்கிறது.

இதில், ஹீரோ நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையே 629 வாகனங்கள் மட்டுமே வித்தியாசம். அதிகபட்சமாக, டி.வி.எஸ்., நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 30.42 சதவீதத்தை எட்டியுள்ளது. அனைத்து நிறுவனங்களும், 14 சதவீதத்துக்கு குறையாமல் வளர்ச்சி கண்டுள்ளன.

Advertisement