மூலப்பொருள் விலை அதிகரிப்பால் கொசுவலை தயாரிப்பாளர்கள் கவலை
கரூர் : கொசுவலை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளான குருணை விலை உயர்ந்துள்ளதால், கரூர் உற்பத்தி நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
கரூர் மாவட்டம், ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக, பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிருந்து, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் வரை, கரூரில் கொசுவலை வர்த்தகம் நடக்கிறது.
தற்போது, கொசுவலை மூலப்பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் குப்புராவ் கூறியதாவது:
கொசுவலை தயாரிக்க, பெட்ரோலில் இருந்து தயாரிக்கப்படும், 'ஹை டென்சிட்டி பாலி எத்திலின்' என்ற குருணை பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கு முன், ஒரு கிலோ குருணை, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, குருணை விலை, 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ, 118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமே சிறிய அளவில், ஏற்ற - இறக்கத்தில் உள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள், குருணை விலையை, 15 சதவீதம் உயர்த்தி உள்ளன. பிப்., மார்ச் ஆகிய மாதங்கள் கொசுவலை விற்பனை சீசனில், மூலப்பொருள் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
எஸ்ஐஆர் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார் முதல்வர் மம்தா
-
வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை
-
தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ் 'அட்டாக்' ஆரம்பம்
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
-
மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்
-
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு