டாடா உப்பு உற்பத்தி ஆலை ராமநாதபுரத்தில் அமைகிறது

சென்னை :ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில், சமையல் உப்பு உற்பத்தி செய்யும் ஆலையை, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், சோடா சாம்பல், சிலிக்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறது.

இந்நிறுவனம், வாலிநோக்கத்தில், ஐ.வி.எஸ்.டி., எனப்படும் அயோடைஸ்டு செய்யப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இந்த ஆலை ஆண்டுக்கு, 2.10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும். இதற்காக, 515 கோடி ரூபாயை டாடா கெமிக்கல்ஸ் முதலீடு செய்ய உள்ளது. உப்பு உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளை விரைவில் துவக்கி, 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், 500க்கும் மேற் பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

Advertisement