அமெரிக்க வரிக்குறைப்பு; பிரதமர் மோடிக்கு தே.ஜ., எம்.பி.,க்கள் பாராட்டு

நமது நிருபர்





அமெரிக்க வரிக்குறைப்புக்கு மேற்கொண்ட நடவடிக்கைக்காக, டில்லியில் நடந்த தேஜ., கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் தாக்கல் செய்தார். பார்லிமென்டில் நேற்றும், இன்றும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது.



இந்நிலையில் இன்று (பிப்ரவரி 03) டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்தியப்பொருட்கள் மீதான அமெரிக்க வரிக்குறைப்புக்கு முயற்சி மேற்கொண்ட பிரதமருக்கு எம்.பி.,க்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement