ஹிமாச்சல் பிரதேசத்தில் சோகம்: பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பஸ் விபத்து, 4 பேர் பலி
டேராடூன்; ஹிமாச்சல் பிரதேசத்தில் குவானு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
டேராடூன் மாவட்டம்,நெர்வாவில் இருந்து பான்டாசாஹிப் என்ற பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 34 பேர் இருந்துள்ளனர். பஸ்சானது, குவானு என்ற இடத்திற்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்தை அறிந்த அங்குள்ளோர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களையும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டனர். இந்த பணியில் மாநில பேரிடர் மீட்பு பணியினரும் ஈடுபட்டனர். விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற முதல்கட்ட விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி
-
யுபிஐ பயன்பாட்டில் புது உச்சம்: ரூ.230 லட்சம் கோடி பணப்பரிமாற்றம்
-
அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்
-
எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா இதுவரை பேசவில்லை; ரஷ்யா தகவல்
-
காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பரப்பக் கூடாது; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்