பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
நமது நிருபர்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ல் தொடங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடக்கிறது.
இன்று (பிப்ரவரி 03) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் ராஜ்சபாவில் அலுவல் நேரம் நடந்து வருகிறது. அவையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ராஜ்யசபாவில் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்ப அவை தலைவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர் கட்சிகளுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான். ஒவ்வொரு கூட்ட தொடரிலும் இதே கதைதான்
என்ன விளக்கம் கொடுத்தாலும் நீங்க ஒத்துவரமாட்டீங்க இந்திய எதிரி கட்சிகளே. இருந்தாலும் மத்திய அரசு எல்லா விளக்கங்களையும் கொடுக்கும்... வெய்ட் பண்ணுங்கப்பா.
பரவும் ரவுடித்தனம். ஆட்டி வைப்பது பின்புலம் அதன் பணபலம்.மேலும்
-
காணிக்கை அன்னை சர்ச் தேர் திருவிழா விமரிசை
-
ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரால் வெங்கச்சேரி பாலம் வலுவிழக்கும் அபாயம்
-
விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்
-
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் மின் விபத்து அபாயத்தில் வேடல் மக்கள்
-
முருக கடவுளாக விஜயை போற்றி பாடியதால் போலீசில் புகார்
-
கான்கிரீட் உதிர்ந்த மின் கம்பத்தால் வட்டம்பாக்கத்தில் விபத்து அபாயம்