பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடன் தொடர்பு: விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வந்தார் பில் கிளிண்டன்
நியூயார்க்: பாலியல் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோர், அரசு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் இன்னும் பெரும் செல்வாக்குடன் இருக்கிறார். இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடன் தொடர்பு இருப்பது, விசாரணை ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.
இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கிளிண்டன் மீது பார்லியை அவமதித்து விட்டதாக விவாதிக்கவும், ஓட்டெடுப்பு நடத்தவும் ஆளும் கட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, தங்கள் முன்னிலையில் கிளிண்டன் தம்பதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசின் கண்காணிப்புக்குழுவும் (ஓவர்சைட் கமிட்டி) தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த குழுவின் அதிகாரிகள், கிளிண்டன் தம்பதியின் வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். இதில், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கிளிண்டன் தம்பதி ஒப்புக்கொண்டனர்.பார்லியில் அசிங்கப்படுவதை தவிர்க்கவே, இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்கு கிளிண்டன் தம்பதி முன்வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் எப்போது விசாரணைக்கு போவார்
எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நியூயார்க் சிட்டி மேயர் சோஹ்ரான் மம்தானியின் தாயான மீரா நாயர், டெல்லியில்
Salaam Baalak Trust children என்ற பெயரில் பல அனாதை இல்லங்களை நடத்தி வருகிறார். அந்தச் சிறுவர் சிறுமிகளின் நலன் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். நன்கொடை என்ற பெயரில் வெள்ளையர்கள் அந்த அனாதை இல்லங்களுக்குச் செல்வது சற்றும் ஏற்புடையதல்ல.மேலும்
-
ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரால் வெங்கச்சேரி பாலம் வலுவிழக்கும் அபாயம்
-
விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்
-
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் மின் விபத்து அபாயத்தில் வேடல் மக்கள்
-
முருக கடவுளாக விஜயை போற்றி பாடியதால் போலீசில் புகார்
-
கான்கிரீட் உதிர்ந்த மின் கம்பத்தால் வட்டம்பாக்கத்தில் விபத்து அபாயம்
-
நாங்கள் என்ன 'உண்டியல் குலுக்கி'களா?