எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா இதுவரை பேசவில்லை; ரஷ்யா தகவல்

6

மாஸ்கோ: எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா தங்களுடன் இதுவரை பேச்சு நடத்தவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த 25 சதவீதம் வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.


இந் நிலையில், எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா தங்களுடன் இதுவரை பேச்சு நடத்தவில்லை என்று ரஷ்யா கூறி உள்ளது. இதுகுறித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்து உள்ளதாவது;

இந்தியாவுடனான உறவை ரஷ்யா மதிக்கிறது. அதேபோல, இந்தியா-அமெரிக்க உறவுகளையும் மதிக்கிறோம். ஆனாலும், இது முக்கியமான விஷயம். எனவே, டில்லியுடனான எங்கள் உறவுகளை மேலும் வளர்க்கவே விரும்புகிறோம். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து, இதுவரை எந்த அறிக்கையையும் நாங்கள் இந்தியாவிடம் இருந்து பெறவில்லை.

இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

Advertisement