காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பரப்பக் கூடாது; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியதாக நான் கேள்விப்பட்டேன்; இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது உரையைத் தொடரலாம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினேன். இருப்பினும், முன்னாள் ராணுவத் தளபதி கூறாத, உண்மையல்லாத, மற்றும் விதிகளின் கீழ் அனுமதிக்கப்படாத விஷயங்களை அவையின் மீது திணிக்கக் கூடாது. அவர் அத்தகைய விஷயங்களைக் கூற முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் இது மற்ற கட்சி எம்பிக்கள் பேசுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
ராகுலுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து சபாநாயகர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதாலும், அவை மரபில் வராததாலும், இதற்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது என்று அவர்களிடம் கூறியுள்ளேன். ராகுல் அவையின் உறுப்பினர் என்பதால், அவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அவைக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
ராஜ்யசபாவில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்து பொய்களைப் பரப்பி வருகிறது; இது சரியல்ல. இது நமது விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியதாக நான் கேள்விப்பட்டேன்; இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது.
தற்போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மற்ற விஷயங்களுக்கும் நேரம் இருக்கிறது. அரசு எதையும் தவிர்க்கப் போவதில்லை. நாங்கள் விதிகளைப் பின்பற்றுவோம், சபைக்கு வருவோம், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்போம். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
காங்கிரஸ் பொய்களை பரப்பக்கூடாது.
காங்கிரஸ் பொய்களை பரப்ப கூடாது.
பிஜேபி யினர் அள்ளிவிடும் பொய்களை என்னவென்று சொல்வது. பிஜேபி அரசு தனது தோல்விகளை ஒப்புக்கொள்ள முடியாமல் உண்மைகளை மறைக்கிறது. உண்மைகளை சொல்லும் எதிர்கட்சியினரின் குரல்வளையை நெறிப்பதில் மும்முரமாக உள்ளது.
சில க.உ பிங்களுக்கு இந்திரா காந்தி எமர்ஜென்சி ன்னு அமுல்படுத்தி தேசத்தின் குரல் வளையை நெறித்து கொன்றது மறந்து போயிடும். இந்திய நாட்டின் கருப்பு தினம். டமில் நாட்டுல என்ன வாழுதாம்? எதிர்த்து எவன் பேசினாலும் தீய முக வின் ஸ்பெஷல் போலீஸ் டீம் கவனிச்சுப்பாங்க. இந்த விஷயம் சிரிப்பா சிரிக்குது. இந்தியாவை தலை நிமிர வைத்து சிறப்பு தேடித்தந்த ஆட்சியாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்ய கூடாது என்றும் தெரியும்.
முத்துவின் வாயில் சொத்தை. சொத்தையின் விலை இருநூறு மட்டுமே
ஓரிரு மன்சாதனங்கள் வர தான் செய்யும்
கான் கிராஸ் கட்சி என்றாலே பொய் தானே பிரதானம்.... அதில் தான் அவர்களின் பிழைப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது.மேலும்
-
மும்பை விமான நிலையத்தில் உரசிய விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
-
கால்பந்து: இந்தியா வெற்றி
-
தீர்ப்பு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது: உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
டெண்டர் முறைகேடில் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
-
மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கோல்கட்டாவிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி