மும்பை விமான நிலையத்தில் உரசிய விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் இறக்கை உரசிக் கொண்டது. இதில் கோவை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது.
மும்பையில் இருந்து கோவைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில், ஓடுதளத்தில் இருந்தது.அதேநேரத்தில் ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியது.
அப்போது அங்கு ஏற்கனவே கோவைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கை மீது இண்டிகோ விமானத்தின் வலது பக்க இறக்கை உரசியது. இதில் கோவை செல்ல இருந்த விமானத்தின் இறக்கை லேசாக சேதம் அடைந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி இரண்டு விமானங்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்த மும்பை டிஜிசிஏ அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் உரிய விசாரணைக்கு பிறகு விமானம் கிளம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (4)
பிளேன் பட்டாபி - ,
04 பிப்,2026 - 06:37 Report Abuse
ரெண்டடிக்கு ரெண்டை இடம் இருந்தாலே பெட்ரூம் கட்டிருவாங்க. ஏர்போர்ட், ரன்வே கட்டுறதிலும் அதே கஷ்டம். வெளில மட்டும் ஆடம்பரமா பில்டிங். மக்களிடம் காசு உருவல். 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
04 பிப்,2026 - 03:57 Report Abuse
ஒரு ரன்வேயில் கிளம்பத் தயாராக ஒரு விமானம் நிற்கும் பொழுது அதே ரன்வேயில் மற்றொரு விமானம் தரையிறங்க எப்படி விமான கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்தது? அப்படியானால் இது அந்த பொறுப்பற்ற தறுதலைகளின் தவறுதானே? அந்த நபர்களை வேலையில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் வாழ்நாளில் வேறு எங்குமே வேலையில் சேர முடியாதபடி செய்ய வேண்டும். 0
0
Senthoora - Sydney,இந்தியா
04 பிப்,2026 - 05:14Report Abuse
லஞ்ச லாவண்ணியத்தில் வேளைக்கு சேர்ந்தவர்கள், இப்படித்தான் வேலை செய்வார்கள். 0
0
duruvasar - indraprastham,இந்தியா
04 பிப்,2026 - 14:30Report Abuse
இடஓதுக்கீடு இடஓதுக்கீடு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டிர்களே 0
0
Reply
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படணும்; முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
-
எஸ்ஐஆர் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார் முதல்வர் மம்தா
-
வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை
-
தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ் 'அட்டாக்' ஆரம்பம்
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
Advertisement
Advertisement