தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ் 'அட்டாக்' ஆரம்பம்
சென்னை: ''இப்படி ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வர சொல்லுங்கள், நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அவர் எதுவும் தெரியாமல், அறியாமல் பேசுகிறார்,'' என நடிகர் விஜயை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடுமையாக சாடி உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.
வாக்குறுதிகள் விபரம் பின்வருமாறு:
* முதியோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3ம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1200ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழக்கப்படும்.
* மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டி போட்டியின் போது வீரர்கள் உயிரிழந்தால் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 ஆயிரமும், போட்டி நடத்த அரசின் சார்பில் மானியம் ரூ.5 லட்சம் வழங்கப்படும். தற்போதுள்ள ஆன்லைனில் பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை பின்பற்றப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் அதிகமான அறிவிப்புகள் வரும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் இருக்கிறது. அதிமுக தலைமையில் அமை க்கப்பட்டுள்ள தேஜ கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு இபிஎஸ் அளித்த காட்டமான பதில்:
அவர் (விஜய்) பொதுவெளியில் வந்து பார்த்தால் தானே தெரியும். பொதுவெளியில் வரவில்லை. ஒரு சம்பவம் நடந்து போய்விட்டது. 72 நாட்கள் ஒரு கட்சி தலைவர் வெளியில் வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. எந்தெந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரியவில்லை.
எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கும் என்று தெரியவில்லை. அவருக்கு ஒன்னுமே தெரியாத போது, எங்களிடம் கேள்வி கேட்டால், அவரிடம் போய் கேள்வி கேளுங்கள்.
@quote@ஏற்கனவே கூட்டணி அமைக்கும் போது அதிமுக தெளிவு படுத்தி விட்டது. எங்களது கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். எங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று தெளிவுப்படுத்திவிட்டோம்.quote அவர் மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வது இல்லை. அவரை பற்றி எங்களிடம் கேள்வி கேட்கலாமா?
@quote@ஒரு கட்சியின் தலைவருக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். அவர் தெரியாமல் அறியாமல் பேசி கொண்டு இருக்கிறார். இப்படி ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வர சொல்லுங்கள், புரிந்து கொள்ளட்டும். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். வெளியில் நடப்பதை புரிந்து கொள்ளட்டும்.quote
ஊழல் சக்தி என்றால் எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டார். அவர் யாரை கூட வைத்து கொண்டு ஊழல் என்று சொல்கிறார். அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
முதல்கட்ட வாக்குறுதி!
ஏற்கனவே முதல்கட்டமாக 5 வாக்குறுதிகளை இபிஎஸ் அறிவித்துள்ளார். இது குறித்து நமது நாளிதழ் மற்றும் வெப்சைட்டில் செய்தி வெளியாகி இருந்தது.
படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு இத்தனை சந்தி சிரிக்கவில்லை... இ பி எஸ் மீண்டும் வரட்டும்
அடியேன் இந்த அறிவிப்புகளை வரவேற்கிறேன். முகஸ் அண்டு முகஸ் கூட்டத்தை காணாமல் அடிக்க இது உதவும் ன்னு நம்பறேன். டமில் நாட்டு மக்கள் சாராயக் கடை அவலங்களை மறந்து பணத்துக்கு வாயை பிளப்பவர்கள். இது ஒண்ணை வச்சிகிட்டு தான் திருட்டு தீயமுக ஆட்சிக்கு வருகிறது. ஸோ தீயமுக வை கீழே இறக்க வேறு வழி என்ன இருக்கு? ஏற்கனவே எக்ஸ் நிதி முந்திரி டாஸ்மாக் வருமானத்துல 40 % கவர்மெண்டுக்கு வராமல் அமுக்கிடுறானுங்கன்னு ஓபனா சொல்லியிருக்காரு. அவுரு இருந்தா மேலும் மேலும் இது மாதிரி தண்டவாளத்தில் ஏத்திப்புடுவாருன்னு தூக்கி மூலையில் அடிச்சிட்டானுங்க. இதெல்லாம் அப்பறம் வச்சிக்கலாம்.முதல்ல முகஸ் குரூப்பை கீழ் இறக்கணும் அப்பறம் ஓட ஓட விரட்டி அடிக்கணும். அவனுங்க அடிச்ச திருட்டு பணத்தை புடுங்கி இந்த செலவுக்கெல்லாம் வச்சிக்கலாம். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்.
ஆட்சியாளர்கள் மானியம் தாங்கோ, இலவசம் தாங்கோ, எது வேனாலும் தாங்கோ. ஆனால், அது எல்லாத்தையும் உங்க சொந்த பணத்துல இருந்து தாங்கோ. கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்க, நீங்க யாருங்கோ? பொதுமக்கள் எங்களிடம் இதற்கு அனுமதி வாங்கினீங்களாங்கோ? அப்புறம் எப்படிங்கோ ??
அதெல்லாம் சரிதான், மாநில வருவாயை பெருக்க என்னவெல்லாம் செய்வீர்கள், தமிழக அரசின் கடன் தொகையில் ஆண்டுக்கு எவ்வளவு அடைத்து வட்டி மற்றும் கடன்சுமையை குறைப்பீர்கள்? போதையால் தமிழகம் சீரழிகிறது என தினம் தினம் அறிகை விடும் நீங்கள், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள், முதல் கையெழுத்து டாஸ்மாக்கை மூடுவதற்காகவா? நட்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை எப்படி சரிபடுத்த போகிறீர்? இதற்கெல்லாம் வழி சொல்லாமல், எல்லோருக்கும் இலவச பேருந்து, மகளிருக்கு மாதம்தோறும் 2000₹ முதியோர், மற்றும் மாற்றுதிறன் பெற்றோருக்கு 2000₹ குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், திருமண பெண்களுக்கு 1பவுன் தங்கம், பட்டுபுடவை, மாப்பிள்ளைக்கு பட்டுசட்டை, வேட்டி இலவசம்,, என்று முதல் கட்ட இலவச அளிவிப்பு, இரண்டாம்கட்டம், மூன்று, நான்கு என எகத்துக்கு இலவச அறிவிப்புகளை அள்ளி விடுகிறீர்களே? அது ஏன்? பதவிமேல் அவ்வளவு வெரியா? அல்லது தமிழக மண்,மலை போன்ற கனிமவளங்களை சுரண்டுவதில் தீவிரமா? எதற்காக இலவசம் தருகிறீர்கள்? மாநிலத்தை முன்னேற்ற உங்கள் திட்டங்கள் என்ன? குடிசையில்லா மாநிலமாக எந்த அண்டுக்குள் செய்வீர்கள்? தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் யாரும் இல்லை என்ற நிலையை எத்தனை ஆண்டுக்குள் எட்டுவீர்கள்? இதுமாறி எதையுமே தெரிவிக்காத நீங்கள் - இலவசம் இலவசம் என ஏலம்போடுவது எதற்காக?
கைகாசா. அடிச்சு விடு. 10 லட்சம் கோடி கடன் ஒரே வருஷத்தில் 20. லட்சம் கோடி ஆகிவிடும். அப்புறம் என்ன?? ஒரு இட்டிலி கையேந்தி பவனில் 100 ரூபாய் ஆகிவிடும். பெரிய பெரிய ஓட்டல்களில் 500 ஆகிவிடும். தமிழக மக்களுக்கு விடிவு காலமே கிடையாது. நன்கு படித்தவர்கள் எல்லாம் அமெரிக்கா ஜெர்மனி என்று போய் சுகமாக இருப்பார்கள். ஊபீஸ் எல்லாம் பட்டையில் மட்டையாகி இருப்பார்கள். வடக்கன் எல்லா வேளையிலும் இருப்பார்கள். இறைவா உன்னாலும் காப்பாற்ற முடியாது
நானும் அதிமுக கூட்டணி ஆதரவாளன் தான்.. ஏற்கனவே திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து அவர்களின் நம்பகத்தன்மை கேலிக்குறியதாக இருக்கிறது. நீங்கள் தரும் இத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியுமா? மக்கள் தெளிவடைந்து இருக்கிறார்கள். இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கிருந்து பணம் வரும் என்பதனை மக்கள் முன்பு வைக்க வேண்டும்.. முதலில் மக்கள் நம்பக்கூடிய வகையில் நம்பிக்கை ஏற்படுத்துங்கள்.....!!!
அசத்து சாமி...நீ அசத்து...நீ அந்த பழனிமலை சாமி...நம் நாடு...ஆன்மீக நாடு...தேசப்பற்றுடன் கூடிய ரெட்டை என்ஜினை காண ஆவலாயிருக்கிறோம்... வாழ்க பாரதம்...
முதல்ல பேசுன மாதிரி பிரேமலதா அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுங்க...
விதவை பெண்கள், முதியோர் வாழ்வதாரத்திற்கு உதவி என்னும் வாக்குறுதி மிகவும் வரவேற்க்கதக்கதே. வளர்ந்த நாடுகளிடையே இந்த திட்டம உள்ளது. விடியல் ஏமாற்று டுபாக்குர் வாக்குறிதிபோல் இல்லை.
மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடியா? போச்சு விடியல் இனி தூங்குன மாதிரி தான்..மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படணும்; முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
-
எஸ்ஐஆர் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார் முதல்வர் மம்தா
-
வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
-
மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்