சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
லா நுசியா: எலைட் குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ், பிரீத்தி, பிரியா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. இதில் 21 நாடுகளை சேர்ந்த, 214 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரீத்தி 5-0 என, கஜகஸ்தானின் அலியாஸ்கர் சிம்பத்தை வீழ்த்தினார். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பிராச்சி 5-0, என ஸ்பெயினின் வனேசா மோரெல் ரமிரெசை வென்றார். இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ) 5-0 என, கனடாவின் அலெசியாவை தோற்டித்தார். இந்தியாவின் காஜல் (65 கிலோ) 4-1 என கஜகஸ்தானின் அசெம் டனாடரை வென்றார்.
ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 5-0 என, நெதர்லாந்தின் பின் பாசை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் சச்சின் (60 கிலோ), முகமது ஹுசாம் உத்தின் (60), அபினாஷ் (65), தீபக் (70), ஆகாஷ் (75), அன்குஷ் (80) வெற்றி பெற்றனர்.
மேலும்
-
கனிமங்களை பரவலாக்குங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
கல்வித்துறை அதிரடி: கர்நாடகாவில் 'மொபைல் போன், டிவி'யை இரவு 7:00 - 9:00 மணி வரை நிறுத்த அலாரம்
-
நக்சல் இல்லாத மாவட்டம் ஆனது ஒடிஷாவின் மால்கங்கிரி
-
பிழைகள் மொழிக்கே சாபம்; தேர்தல் கமிஷனுக்கு அல்ல பார்லி.,யில் கமல் பேச்சு: புரிந்துகொள்வோர் புரிந்துகொள்க
-
மணிப்பூர் முதல்வராக கெம்சந்த் பதவியேற்பு
-
பிப்., 7ல் பிரதமர் மலேஷியா பயணம்