நக்சல் இல்லாத மாவட்டம் ஆனது ஒடிஷாவின் மால்கங்கிரி

மால்கங்கிரி: ஒடிஷாவில் 21 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுக்ராம் மார்கம் நேற்று சரணடைந்தார். இதன் மூலம் மால்கங்கிரி, நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கரின் நப்ரங்பூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் 9 நக்சல்கள் சரணடைந்தனர். இதையடுத்து அந்த மாவட்டம் நக்சல் தீவிரவாதம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிஷாவில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த மால்கங்கிரியில் சி.பி.ஐ., மாவோயிஸ்ட் ஏரியா கமிட்டி உறுப்பினரான சுக்ராம் மார்கம் மட்டும் எஞ்சி இருந்தார்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவரது தலைக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநில அரசின் சரண்டர் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மார்கம் நேற்று போலீஸ் முன் சரணடைந்தார்.

Advertisement