மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
புதுடில்லி : '' ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எங்களை மத்திய அரசு பேச அனுமதிக்கவில்லை,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ராஜ்யசபாவிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்புசெய்த பிறகு காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான கார்கே கூறியதாவது: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமரின் பதில்உரையை கேட்க நாங்கள் விரும்பினோம். கடந்த நான்கு நாட்களாக லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேச அனுமதிக்கப்படவில்லை. லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் சில விஷயங்களை எழுப்ப விரும்பினோம். ஒன்று ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், மற்றொன்று ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விஷயங்கள் குறித்து பேச விரும்பினோம்.
அமெரிக்காவுடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனை புறக்கணித்து விட்டனர். டிரம்ப் சொன்தை அப்படியே ஒப்புக் கொண்டுள்ளனர். வெளியுறவு கொள்கை குறித்து கேள்வி கேட்க விரும்புகிறோம். சமூக நீதி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என ஒன்றன் பின் ஒன்றாக கேள்வி கேட்க விரும்புகிறோம்.
ஆனால் இதுவரை பேச அனுமதிக்கவில்லை. பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தோம். பார்லி விதிகள் பின்பற்றப்பட வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்காமல் மத்திய அரசு அடம்பிடித்தது. ராஜயசபாவிலும் பிடிவாதம் காட்டியது.
காங்கிரசின் பல பெரிய தலைவர்கள் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைய ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர் சிறை சென்றுள்ளனர். ஆனால் ஒரு தலைவர் அவர்களை விமர்சனம் செய்கிறார். இதனை பார்த்து அரசு மவுனம் காக்கிறது. கண்டனம் தெரிவிக்கவில்லை .
இன்று நாம் பார்க்கும் நவீன இந்தியாவிற்கு முக்கிய காரணம் முன்னாள் பிரதமர்கள் நேருவும் இந்திராவும் ஆற்றிய பணிகளை காரணம். அவர்களுக்கு எதிராக பார்லிமென்டில் பேசினால் அதற்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். எங்களை பேச அனுமதிக்காவிட்டால் நாங்கள் பார்லிமென்ட்டில் இருந்து வெளிநடப்பு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
என்னத்த பெருசா பேச போறீங்க...தாய் மொழியை தாய் நாட்டை பழித்து பேசுவதை விட, உங்களை நிரந்தர தடை விதிக்க வேண்டும்