மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கிறது காங்கிரஸ்

கோல்கட்டா: விரைவில் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.


மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தேர்தலுக்கான பணிகளில் அம்மாநிலத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்தியில்ஆளும் பாஜ ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இடதுசாரிகளும், காங்கிரசும் அங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க டில்லியில் ஆலோசனை நடந்தது. காங்கிரஸ் தலைவர் கார்கே, எம்பி ராகுல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மேற்கு வங்க மாநில நிர்வாகிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தொண்டர்களின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement