ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
கீவ்: ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர். இருநாடுகள் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடான பிரான்சின் 'டிவி' ஒன்றுக்கு போர் தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில், “உக்ரைனில், போர்க்களத்தில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 55,000 ஆகும். மேலும், பெருமளவிலான வீரர்கள் காணாமல் போயுள்ளனர்,” என கூறியுள்ளார்.
இந்த எண்ணிக்கை ரஷ்யாவின் முழு அளவிலான போர் துவங்கிய 2022ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறிக்கிறது. கடந்த 2024ம் ஆண்டில் 31,000 வீரர்களும், கடந்த ஆண்டில் 46,000 வீரர்களும் உயிரிழந்ததாக ஜெலன்ஸ்க்கி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை போரின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உன்னை தேர்ந்தெடுத்த உக்ரைன் மக்களுக்கு ....ஆப்பு வைத்து விட்டாய்..,... அடுத்த நாட்டுக்காரன் பேச்சை கேட்டுக்.....தாய் நாடு போன்ற ரஷ்யா முதுகில் குத்த நினைத்த உங்களுக்கு இதுவும் வேண்டும் ....இன்னமும் வேண்டும்....உக்ரைன் நாடு காஷ்மீர் முதல் இந்தியாவின் தற்காப்புக்கான அணுகுண்டு சோதனை வரை ....அத்தனை விஷயங்களிலும்....இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்து வந்து இருக்கிறார்கள்.
ரஷ்யா மனது வைத்தால் போரை நிறுத்தலாம்.
ஜோக்கரிடம் ஆட்சியை கொடுத்த உக்ரைன் மக்கள் அந்த நபரை விரட்டிவிட்டு போரை விரும்பாத தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இவ்வளவு பேரின் இழப்பால் எவ்வளவு குடும்பங்களின் எதிர்காலம் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். போர் நின்று போனாலும் கூட சமூகத்தின் அவலங்களை எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள். நாகரீக உலகில் காட்டுமிராண்டித்தனம் என்பது போர் தான். போர் நிறுத்த உண்மையாகவே எவருக்கும் விருப்பமில்லை.
ஒரு ஜீரோவை மறந்து விட்டார்.
Had he been advised by our honourable PM Modi j, he wouldn't have lost such huge numbers of soldiers....
1 069 000 ஓருயிர் இழேந்தோர் 350 000 காயம் உற்றோர் 08/2025